உலகமே வியந்து பாக்குது! இந்தியாவில் 5 நாளில் நடந்த மரண மாஸ் சம்பவம்!
ஜனவரி 17 முதல் இன்று வரை நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி, உலகின் மிகப்பெரிய ஆட்டோ கண்காட்சியாக மாறியுள்ளது. பாரத் மண்டபத்தில் பிரதான கண்காட்சியும், கிரேட் இந்தியா எக்ஸ்போவில் வணிக வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்ட மூன்று இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 5 நாட்களில், 8.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தது. நிகழ்வு முடிவடைவதற்குள் 9 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், எதிர்கால முன்னேற்றங்களுக்கான இந்திய மோட்டார் வாகன துறை தயார் நிலையில் இரப்பதாக அவர் எடுத்துரைத்தார். புதிய தொழிற்நுட்பங்கள், மாறிவரும் நுகர்வோர் எதிர்பார்ப்புகள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் இளம் வாடிக்கையாளர்களின் பெரிய மக்கள் தொகை ஆகியவற்றிற்கு இந்த வளர்ச்சியைக் காரணம் கூறினார்.

கண்காட்சியின் முக்கிய விஷயமாக மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் புதுமையான தொழிற்நுட்பங்களில் இருந்தது. வணிக துறையின் கூட்டுச் செயலாளர் வீமல் ஆனந்த், பல மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டதால் 2025 இல் EV வாகனங்களின் ஊடுருவல் அதிகரிப்பதைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் 34 வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர், இது இதுவரை இல்லாத மிகப்பெரிய பங்கேற்பாக இது இருக்கிறது.
டிரோன்கள் மற்றும் விமான டாக்ஸிகள் போன்ற கான்செட்ப்களை வழங்கி ஸ்டார்ட்அப்களும் இதில் முக்கிய பங்கு வகித்தன. கண்காட்சியில் 200 க்கும் மேற்பட்ட அறிமுகங்கள் மற்றும் வெளியீடுகள் இடம்பெற்றன, முக்கியமாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டன. சாலைப் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு ஆகியவை நிகழ்வின் போது விவாதிக்கப்பட்ட முக்கிய கருப்பொருள்களாக இருந்தது.

மாருதி சுஸூகி தனது முதல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமான e Vitara ஐ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இந்தகார் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, இது HEARTECT-e என்ற புதிய தளத்தில் கட்டப்பட்டது. 49 kWh பேட்டரி பேக் மற்றும் 61 kWh பேட்டரி பேக் ஆகிய இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் இது கிடைக்கும், இது சார்ஜ் ஒன்றுக்கு சுமார் 500 கிமீ ரேஞ்சை தரக்கூடியது.
ஹூண்டாய் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா எலெக்ட்ரிக் காரை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இந்த மாதிரி 390 கிமீ மற்றும் 473 கிமீ ரேஞ்ச்களை வழங்கும் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. விலைகள் ₹18 லட்சம் முதல் ₹23.49 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ்நத காரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வின்ஃபாஸ்ட் தனது VF6 மற்றும் VF7 எலெக்ட்ரிக் கார்களுடன் இந்திய மார்கெட்டில் நுழைவதாக அறிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளது. தற்போது மூன்று கண்டங்களில் 12 நாடுகளில் இயங்கி வரும் வின்ஃபாஸ்ட், தனது உலகளாவிய இருப்பை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அந்நிறுவனம் ஆலையை அமைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி முன்னணி ஆட்டோமொபைல் தொழிற்நுட்பத்தை மட்டுமல்லாமல் எதிர்கால புதிய டிரெண்டுகளை வடிவமைப்பதில் இந்தியாவின் சாத்தியக்கூறுகளையும் எடுத்துக்காட்டியது. காட்சிப்படுத்தப்பட்ட ஏராளமான புதுமைகளுடன், உலகளாவிய மோட்டார் வாகனத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை இது எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









