சொன்னதவிட கம்மி விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்காங்க! இப்படி நடக்குறதெல்லாம் உலக அதிசயம்!

பிரபல சீன செல்போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஜியோமி (Xiaomi), தற்போது மின்சார கார் உற்பத்தியாளராகவும் உருவெடுத்திருக்கின்றது. நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான எஸ்யூ7 அல்ட்ரா (SU7 Ultra) எனும் கார் மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. சீன சந்தையிலேயே இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக 5 லட்சத்து 29 ஆயிரத்து 999 யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 63.63 லட்சம் ஆகும். ஆரம்பத்தில் இதைவிட மிக அதிக விலையே இந்த காருக்கு கூறப்பட்டது. அதாவது, 8 லட்சத்து 14 ஆயிரத்து 900 சீன யுவான்களுக்கே எஸ்யூ7 அல்ட்ரா விற்பனைச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த விலையிலேயே இதற்கான ப்ரீ புக்கிங் பணிகளும் தொடங்கின.

Xiaomi cuts price of luxury su7 ultra electric sedan

இந்த நிலையிலேயே சொன்னதைவிட மிகவும் குறைவான விலையை இந்த காருக்கு ஜியோமி நிறுவனத்தின் நிறுவனர் லீ ஜுன் நிர்ணயம் செய்திருக்கின்றார். இதனால் இந்த காருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போர்ஷே மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கவே இவ்வளவு குறைவான விலை இந்த காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காருக்கான ப்ரீ ஆர்டர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கடந்த அக்டோபர் மாதத்திலேயே இந்த பணிகள் சீன சந்தையில் தொடங்கின. இந்த கார் இரண்டு விதமான வேரியண்டுகளில் அங்கு விற்பனைக்குக் கிடைக்கும். ஒன்று ஓர் முழு சார்ஜில் 668 கிமீ ரேஞ்சை ஓர் முழு சார்ஜிலும், மற்றொன்று 800 கிமீ ரேஞ்சை ஓர் முழு சார்ஜிலும் வழங்கும்.

Xiaomi cuts price of luxury su7 ultra electric sedan

இந்த காருக்கு இப்போது வரவேற்புக் குவிந்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. வெறும் 10 நிமிடங்களிலேயே இந்த காருக்கு 6,900 ஆர்டர்கள் கிடைத்துவிட்டதாகவும் அது கூறியிருக்கின்றது. நிறுவனம் ஆண்டிற்கே 10 ஆயிரம் யூனிட்டுகளையே இந்த காரை விற்பனைச் செய்ய திட்டமிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே ஓராண்டிற்கான விற்பனை வெறும் 10 நிமிடங்களில் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. எஸ்யூ7 அல்ட்ரா எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ ஆகும். இத்தகைய அதீத வேகத்தைக் கன்ட்ரோல் செய்வதற்கு என்று பிரத்யேகமாக ஏபி ரேசிங் பிரேக் (AP Racing brake)-குகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், இந்த காரின் வருகை சில ரேஸ் கார்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த காரில் ஏழு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர லிடார் (LiDAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)-மும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக அவசர கால ஆட்டோமேட்டிக் பிரேக், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் லைட் வசதி ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று பலதரப்பட்ட சிறப்பு வசதிகளைத் தாங்கிய காராகவே தன்னுடைய எஸ்யூ 7 அல்ட்ரா-வை ஜியோமி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதற்கு சீனர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதே வரவேற்பை இது இந்தியா பிற நாடுகளில் விற்பனைக்கு வரும்போதும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, February 28, 2025, 16:20 [IST]
English summary
Xiaomi cuts price of luxury su7 ultra electric sedan to 529 900 yuan competing with tesla and porsc
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+