2 லட்சம் பேர் புக் செய்த கார்! முதல் மாசமே இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?
செல்போனை தயாரித்து வந்த ஷாவ்மி நிறுவனம் தற்போது இவி கார்களையும் தயாரித்து வருகிறது. சீனாவில் மிக முக்கியமான கார் நிறுவனமாக இந்நிறுவனம் மாறியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு காரை வெறும் 3 நிமிடத்தில் 2 லட்சம் பேர் பேர் புக் செய்துள்ள சாதனை சம்பவம் நடந்த நிலையில் இந்நிறுவனம் தற்போது விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் தான் ஷாவ்மி, இந்நிறுவனம் செல்போன் தயரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வருகிறது. சீனாவில் இந்நிறுவனம் தனது இரண்டாவது இவி காராக YU7 என்ற காரை கடந்த ஜூன் மாதம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது.

இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நிமிடத்திலேயே சுமார் 2 லட்சம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டனர் 18 மணி நேரத்தில் 2.90 லட்சம் பேர் இந்த காரை புக் செய்திருந்தனர். இந்த செய்தி அப்பொழுதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்நிறுவனம் 30,000 கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 3 லட்சம் கார்களை விற்பனை செய்யவும், அடுத்தாண்டு 4-5 லட்சம் கார்களை விற்பனை செய்யவும், 2027ம் ஆண்டு இதை 8 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் தனது YU7 காரை தனது முதல் இவி காரான SU7 செடான் காரின் வடிவமைப்பிலிருந்து சில அம்சங்களை பெற்று கூபே வடிவ லுக்கில் எஸ்யூவி காராக உருவாக்கியுள்ளது. இதன் முன்பக்கம் பெரிய கிரில், அக்ரஸிவான ஏர் இன்டேக்கள், ஸ்லோப்பிங் ரூஃப் லைன்கள், மஸ்குலரான ஸ்டான்ஸ், கனெக்டெட் எல்இடி லைட் பார், ஏரோடைமிக்ஸ் புரோபோஷன்ஸ் இந்த காருக்கு ஸ்போரட்டி மற்றும் பிரிமியம் லுக்கை வழங்குகிறது. இந்த காரில் அதிகமான பூட் இடவசதி மற்றும் ஃபிளாஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில் ஆகிய அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 1.1 மீட்டர் நீளம் கொண்ட ஹைப்பர் விஷன் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது போக 16.1 இன்ச் கொண்ட சென்ட்ரல் டச் ஸ்கிரீன் சிஸ்டம் இருக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப் டிராகன் 8 ஜென்3 சிப் செட் மற்றும் ஷாவ்மி ஹைப்பர் ஒஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட் போன் உடன் ஸீம்லெஸ் இன்டகரேஷன் உடன் வருகிறது. இது போக இந்த காரில் ஆம்பியன்ஸ் லைட், பிரிமியம் அப்ஹோல்சரி, பின்பக்க சீட் புரோஜெக்டர்கள், மேக்னடிக் ஆக்ஸசரீஸ்கள், மல்டி ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிறா்டம், கஸ்டமைசபிள் ஷார்ட் கட் பட்டன்கள், சிறப்பான ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த YU7 காரில் மொத்தம் 3 விதமான வேரியன்ட்கள் உள்ளன ஸ்டார்ட் வேரியன்ட் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் உடனும், ப்ரோ மற்றும் மேக்ஸ் வேரியன்ட் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் உடனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 96.3 kWh பேட்டரிபேக் வழங்கப்பட்டள்ளது. இந்த பேட்டரி பிஒய்டி நிறுவனத்தின் எல்எஃப்பி பேட்டரி ஆகும். மற்றொரு பேட்டரி ஆப்ஷனாக 101kWh கொண்ட என்எம்சி பேட்டரி பேக் உள்ளது. இதை CATL நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 760-835 கி.மீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்டாண்ட்ர்ட் வேரியன்ட் ரியர் வீல் டிரைவில் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்கிறது. 835கி.மீ ரேஞ்ச் தருகிறது. ப்ரோ ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.3 நொடியில் பிக்கப் செய்கிறது. 770 கி.மீ ரேஞ்ச் தருகிறது. மேக்ஸ் ஆல் வீல் டிரைவ் வேரியன்ட் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 நொடியில் பிக்கப் செய்கிறது. இந்த கார் அதிகபட்சம் 253 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த காரின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய 10-80 சதவீத பேட்டரி பேக் இருக்கிறது. இது 10-80 சதவீத சார்ஜை வெறும் 12 நிமிடத்தில் செய்கிறது. 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 620 கி.மீ பயணிக்கும் ரேஞ்ச் கிடைக்கிறது. இந்தகாரின் விலையை பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூ29.2 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. மார்கெட்டில் உள்ள டெஸ்லா மாடல் ஒய் காரை விட குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது.
டிரை்வ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் டெலிவரிகள் கடந்த ஜூலை மாத இறுதியில் துவங்கிய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதுவரை 30,000 கார்களை டெலிவரி செய்துள்ளது. முதல் மாதமே இவ்வளவு அதிகமான காரை டெலிவரி செய்துள்ளது பலர வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து இந்த காரின் தயாரிப்பு அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









