15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 620 கி.மீ போகலாம்! இந்த காருக்கு தான் எல்லாரும் வெயிட்டிங்!

சீன செல்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கா்ர தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான எஸ்யூ 7 செடான் கார் மார்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சுமார் 2.58 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் அந்நிறுவனம் தனது வாகன அணி வகுப்பை விரிவுபடுத்தும் நோக்கில் தனது முதல் எஸ்யூவி காரான ஒய்யூ7 என்ற காரை தற்போது வெளியிட்டுள்ளது. டெஸ்லா மாடல் ஒய் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ள இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஷாவ்மி யூவி 7 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பொருத்தவரை மொத்தம் 3 விதமான வேரியன்ட்களி்ல் விற்பனையாகி வருகிறது. புரோ, ஸ்டாண்டர்டு மற்றும் மேக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு வேரியன்டில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனில் வருகிறது. இந்த காரில் 96.3 கிலோ வாட் அஷவர் எலெஎஃப்பி பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 835 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குகிறது. ஒரு முறை சார்ஜ் போட்டால் சென்னை டூ கன்னியாகுமரி சுலபமாக சென்று வரலாம்.

xiaomi yu7

இந்த காரின் புரோ வேரியன்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதிலும் ஸ்டாண்டர்டு வேரியன்டில் உள்ள அதே பேட்டரி பேக் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 496 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு வேரியன்ட்டில் இந்த கார் 320 பிஎஸ் பவரை மட்டுமே வழங்குகிறது. புரோ வேரியன்ட் கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 770 கி.மீ வரை ரேஞ்சை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் டாப் வேரியன்டான யூவி 7 மேக் வேரியன்டை பொருத்தவரை 101.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இந்த பேட்டரி என்சிஎம் பேட்டரியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் இந்த கார் 690 பிஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேக் வேரியன்ட் கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 760 கி.மீ ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 253 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

xiaomi yu7

இந்த ஒரு கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.23 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு போட்டியாக இருப்பது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் ஒய் கார் தான். இந்த கார் 510 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சம் 250 கி.மீ வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டது.

டெஸ்லா மாடல் ஒய் லாங்க் ரேஞ்ச் ஆல்வீல் டிரைவ் மாடல் கார் 719 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. அந்த காரில் 78 கிலோ வாட் ஹவர் பேட்டரிபேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காருக்கான சார்ஜிங் நேரத்தை ஒப்பிடும் போது ஷாவ்மி ஒய்யூ 7 காரை பொருத்தவரை 15 நிமிடம் சார்ஜ் போட்டாலே 620 கி.மீ பயணிக்க முடியும். அதே நேரம் டெஸ்லா மாடல் ஒய் காரில் 15 நிமிடம் சார்ஜ் போட்டால் வெறும் 260 கி.மீ தான் பயணிக்க முடியும்.

xiaomi yu7

ஷாவ்மி ஒய்யூ 7 காரை பொருத்தவரை அளவுகளில் சிறப்பாக இருக்கிறது. இந்த கார் 4999 மிமீ நீளமும், 1996 மிமீ அகலமும், 1600 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் மிகப்பெரிய அளவிலான 3000 மிமீ அளவில் வீல் பேஸ் இருக்கிறது. மேலும் இந்த காரில் சிறப்பம்சமாக வாட்டர் டிராப் ஹெட்லைட், கர்வி பாடி பேனல், ஃபிளாஷ் டோர் ஹேண்டில், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள், கனெக்டெட் எல்இடி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷாவ்மி நிறுவனம் எலெக்ட்ரிக் கார் துறையில் தன் காலடி தடத்தை எடுத்து வைக்கும் போதே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது எஸ்யூவி காரை களம் இறக்கியுள்ளது. இது மக்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 14:25 [IST]
English summary
Xiaomi has unveiled the YU7 electric SUV, showcasing three models with impressive range and power. The YU7 aims to compete directly with Tesla's Model Y in the electric vehicle market, boasting advanced technology and stylish design.
மேலும்... #electric car #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X