770கிமீ ரேஞ்ச் தரும் இன்னொரு இ-காரையும் ரெடி பண்ணிருச்சா! சென்னைல இருந்து பெங்களூரு போயிட்டு திரும்ப வரலாம்!!
சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி நிறுவனம் ஜியோமி (Xiaomi). இந்த நிறுவனம் செல்போன் மட்டுமல்ல வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது சமீபத்தில் இ-கார் உற்பத்தியையும் தொடங்கியது. இதன் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல டிமாண்ட் நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் காரை ஜியோமி நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
ஒய்யூ7 (YU7) எனும் மின்சார கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கிராஸோவர் ரக கார் மாடல் ஆகும். இந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 478 மைல் தூரம் பயணிக்கும். அதாவது, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த காரில் சுமார் 770 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் நிறுவனம் அரசுக்கு சமர்பித்த ஆவணத்தின் வாயிலாகவே இந்த தகவல் உறுதியாகி இருக்கின்றது. எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வர இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்த பணியிலேயே அது மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே சில முக்கிய சான்றுகளை அக்காருக்கு பெரும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் சமர்பிக்கப்பட்ட சான்று பற்றிய விபரங்களே தற்போது வெளியாகி உள்ளன. இந்த மின்சார கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டெஸ்லா-வின் முன்னணி கார் மாடலான மாடல் ஒய்-க்கு போட்டியாக அமையும். மேலும், இதுவே ஜியோமி நிறுவனம் முதல் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகவும் இருக்கும்.
ஆகையால், மார்க்கெட்டில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இத்துடன், புதிய ஜியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் கிராஸோவர் எஸ்யூவி கார் இந்த ஆண்டு சம்மரிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 770 கிமீ ரேஞ்ச் தரும் ஆப்ஷன் உடன் சேர்த்து இன்னும் சில குறைவான ரேஞ்ச் தரும் ஆப்ஷன்களும் இந்த காரில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், 600 கிமீ ரேஞ்ச் தரும் ஆப்ஷனும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. 500 கிமீ அல்லது 600 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய ஆப்ஷன்களே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோமி நிறுவனம் சமீபத்திலேயே எஸ்யூ7 அல்ட்ரா (SU7 Ultra) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இது ஓர் செடான் (Sedan) ரக மின்சார கார் மாடல் ஆகும். இதற்கு மிக அமோகமான வரவேற்பு சீன சந்தையில் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே மேலும் ஓர் புதிய காரை விற்பனைக்குக் கொண்டு வரும் ஜியோமி களமிறங்கி இருக்கின்றது.
யாரும் எதிர்பார்த்திராத மற்றும் சொன்னதைவிட குறைவான விலையிலேயே எஸ்யூ7 அல்ட்ரா எலெக்ட்ரிக் காரை சீனாவில் ஜியோமி விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. அறிமுகமாக 5 லட்சத்து 29 ஆயிரத்து 999 யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 63.63 லட்சம் ஆகும்.
இந்த காருக்கு ரிசர்வேஷன் பணிகள் தொடங்கப்பட்ட வெறும் 10 நிமிடங்களிலேயே 6,900-க்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்துவிட்டன என்பது கவனித்தகுந்தது. இந்த கார் இரண்டு விதமான வேரியண்டுகளில் சீன சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒன்று ஓர் முழு சார்ஜில் 668 கிமீ ரேஞ்சையும், மற்றொன்று 800 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
எஸ்யூ7 அல்ட்ரா எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ ஆகும். இந்த வேகத்தைக் கன்ட்ரோல் செய்ய ஏதுவாக ஏபி ரேசிங் பிரேக் (AP Racing brake) வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஏழு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், லிடார் (LiDAR) தொழில்நுட்பத்தைக் கொண்டு தயார் செய்யப்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)-மும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக அவசர கால ஆட்டோமேட்டிக் பிரேக், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் லைட் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீனாவின் மின்சார கார் சந்தையை ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் அளவிற்கு ஜியோமி-யின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டையே தொடர் கதையாக்கும் பொருட்டு தற்போது புதிய தயாரிப்பையும் அது விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
Source: reuters


Click it and Unblock the Notifications








