31 கிமீ மைலேஜ் குடுக்கற காரை இந்த ரேட்ல வித்தா எப்படி வாங்காம இருக்க முடியும்! ஷோரூம்ல கூட்டம் அலை மோதுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின், கடந்த 2024ம் ஆண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,72,094 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் கடந்த 2024ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars Sold In 2024) பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ 7வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 6 இடங்களில் முறையே டாடா பன்ச், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் உள்ளன.

Maruti Suzuki Baleno Front View

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில், மாருதி சுஸுகி பலேனோ கார், நூலிழையில் 6வது இடத்தை, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரிடம் இழந்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,72,808 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை 1,72,094 ஆக உள்ளது. இதன்படி பார்த்தால் வெறும் 714 யூனிட்கள் வித்தியாசத்தில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரிடம் மாருதி சுஸுகி பலேனோ கார் இழந்துள்ளது. இருப்பினும் மாருதி சுஸுகி பலேனோ பதிவு செய்திருப்பது சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Maruti Suzuki Baleno

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.66 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.83 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இருப்பதிலேயே அதிகபட்சமாக மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மாருதி சுஸுகி பலேனோ உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் நடப்பு 2025ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில் இன்னும் அதிகப்படியான மைலேஜ் வழங்க கூடிய புதிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த புதிய மாடலின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த உதவி செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, January 12, 2025, 17:14 [IST]
English summary
Year ender 2024 maruti suzuki baleno registers total sales of 172094 units in last year
மேலும்... #maruti suzuki #india #year ender 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+