அடி மாட்டு விலையில் விற்கப்படும் 34 கிமீ மைலேஜ் கார்! பொங்கலுக்கு பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த கார வாங்கீரலாம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் தற்போது செடான் ரக கார்களின் விற்பனை எந்த அளவிற்கு 'டல்' அடிக்கிறது? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எஸ்யூவி (SUV) ரக கார்களின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ள நிலையில், செடான் ரக கார்கள் விற்பனையாவது பெரிய விஷயமாக மாறியுள்ளது. ஆனால் இதற்கு மாருதி சுஸுகி டிசையர் மட்டும் விதிவிலக்கு.

செடான் ரகத்தை சேர்ந்த காராக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் கடந்த 2024ம் ஆண்டிலும், மாருதி சுஸுகி டிசையர் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரின் 2024ம் ஆண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

Maruti Suzuki Dzire

இதன்படி கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,67,988 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதாவது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,999 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. செடான் ரக கார் ஒன்று இந்த அளவிற்கு சிறப்பாக விற்பனையாகியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கை மூலமாக இந்திய சந்தையில் கடந்த 2024ம் ஆண்டு மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars Sold In 2024) பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர், 8வது இடத்தை பிடித்துள்ளது.

Maruti Suzuki Dzire Side Design

முதல் 7 இடங்களில் முறையே டாடா பன்ச், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி பலேனோ ஆகிய கார்கள் உள்ளன. 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் இருக்கின்றன.

இந்த பட்டியலை உன்னிப்பாக கவனித்தால் எஸ்யூவி ரக கார்கள் ஆதிக்கம் செலுத்துவது தெரியும். மொத்தம் 5 எஸ்யூவி ரக கார்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 3 ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. எஞ்சிய 2 இடங்களை ஒரு செடான் ரக காரும், ஒரு எம்பிவி (MPV) ரக காரும் பிடித்துள்ளன.

இதன் மூலமாக நமக்கு தெரிய வரும் மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவில் கடந்த 2024ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட செடான் ரக கார் என்றால், அது மாருதி சுஸுகி டிசையர்தான். இந்தியாவில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 6.79 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இருப்பதிலேயே அதிகபட்சமாக இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் கார் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதுடன், மிகவும் சிறப்பான மைலேஜையும் வழங்குகிறது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் எல்லாம் பாதுகாப்பில் மிகவும் மோசமானவை என்ற அவப்பெயரையும் மாருதி சுஸுகி டிசையர் துடைத்தெறிந்துள்ளது.

ஆம், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் மாருதி சுஸுகி டிசையர் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இது போன்ற காரணங்களால்தான், செடான் செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி டிசையர் கார் ஆதிக்கம் செலுத்துவதாக நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2025, 19:53 [IST]
English summary
Year ender 2024 maruti suzuki dzire registers total sales of 167988 units in last year
மேலும்... #maruti suzuki #year ender 2024 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+