கம்பெனி சொல்ற மைலேஜ் அப்படியே கிடைக்குது! அப்ப பைக் வாங்கறதுக்கு பதில் இந்த காரையே வாங்கீரலாம்! விலை இவ்ளோதானா
இந்திய மக்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனையில் இருந்து வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியான அப்டேட்கள் மூலமாக, மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து சிறப்பான வகையில் இருக்கும்படி பார்த்து கொள்கிறது. இந்த வரிசையில் சமீபத்தில் நிறைவடைந்த 2024ம் ஆண்டிலும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 2024ம் ஆண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2024ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,72,808 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 2024ம் ஆண்டில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் (Top 10 Cars Sold In 2024) பட்டியலில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 6வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 5 இடங்களில் முறையே டாடா பன்ச் (Tata Punch), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்கள் உள்ளன.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரக்கூடிய கார்களில் ஒன்றுதான். இருப்பினும் ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், இதன் புதிய தலைமுறை மாடலை, மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்த 2024ம் ஆண்டில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தி இருக்கிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை 6.49 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே உங்களால் வாங்கி கொள்ள முடியும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டை 9.45 லட்ச ரூபாய் என்ற விலையில் உங்களால் வாங்கி விட முடியும்.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பதிலேயே அதிகபட்சமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி (CNG) வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். இதன் காரணமாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களை கடந்த பிறகும் கூட (முதல் முறையாக கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனையில் சாதனைகளை படைத்து வருகிறது.
தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.
குறிப்பாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ், வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்க கூடிய ஒரு விஷயமாக உள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு சில பைக்குகளை காட்டிலும், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மைலேஜ் அதிகம். மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கும் மைலேஜ் கிட்டத்தட்ட அப்படியே கிடைப்பதாக, ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications








