கொரியாக்காரன் மாருதியை செதச்சுட்டான்! மார்க்கெட்டையே தலைகீழா திருப்பி போட்ட கார்! விலை இவ்ளோதானா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டுக்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்திற்கும் அதிகமான ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுதான் ஹூண்டாய் க்ரெட்டா காரின் அதிகபட்ச வருடாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். அதாவது இதற்கு முன்பு ஒரு காலண்டர் ஆண்டில், இவ்வளவு அதிகமான ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டது கிடையாது. இதன் மூலம் ஹூண்டாய் க்ரெட்டா கார் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டில், 2 லட்சத்திற்கும் அதிகமான ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலமாக நமக்கு தெரிய வந்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டில், ஒவ்வொரு நாளும், சராசரியாக 548 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ரெட்டா காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் யூ2 சிஆர்டிஐ டீசல் ஆகியவை ஆகும்.

மறுபக்கம் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேட்டிக், ஐவிடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதற்கு ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரும் விதிவிலக்கு அல்ல.
ஹூண்டாய் க்ரெட்டா காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் ஹூண்டாய் க்ரெட்டா கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.73 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா காரில், செயல்திறன் மிக்க என்-லைன் என்ற மாடலும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.83 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 20.09 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை, மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பான க்ரெட்டா, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருந்து வருகிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








