சலுகைக்காகவே இந்த டாடா ஷோரூமை கண்டுப்பிடித்து தேடி வராங்க! சென்னையை தாண்டி போக தேவையில்ல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக்கணக்கிலான கார்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இதற்கேற்ப, இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் சேல்ஸ் & சர்வீஸ் நெட்க்வொர்க் (Sales & Service Network) உள்ளது.

அவ்வாறு சென்னையின் கொளத்தூர் பகுதியில் செயல்படும் எஃப்.பி.எல் டாடா ஷோரூம் (FPL Tata Showroom)-க்கு சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு சென்றது. அப்போது, 2025 வருட இறுதியை முன்னிட்டு அந்த ஷோரூமில் டாடா கார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் குறித்து கேட்டறிந்தோம். அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

tata car offers at chennai kolathur fpl showroom

இதே கொளத்தூர் எஃப்பிஎல் டாடா ஷோரூமுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி (GST) திருத்தத்திற்கு பின் சென்றிருந்தோம். கார்களின் விலைகள் குறைக்கப்பட்டு இருந்ததால் அப்போது இந்த ஷோரூமில் கஸ்டமர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இருப்பினும், தற்போது வருட இறுதி சலுகைகள் மூலமாக மேலும் கஸ்டமர்களை ஈர்க்கும் முயற்சியில் இந்த டாடா ஷோரூம் ஈடுப்பட்டு வருகிறது.

இந்த குறிப்பிட்ட டாடா ஷோரூமில் இந்த டிசம்பர் மாதத்தை முன்னிட்டு டாடா கார்களுக்கு ரூ.55,000-இல் இருந்து ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகள் காரை பொறுத்து வழங்கப்பட்டு வருகின்றன. குறைந்தப்பட்சமாக, டாடா டியாகோ (Tiago) காரை இந்த ஷோரூமில் வாங்குபவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.55,000 வரையிலான சலுகைகள் கிடைக்கும். இதற்கடுத்து, டாடா பன்ச் (Punch) காருக்கு அதிகப்பட்சமாக ரூ.75,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

tata car offers at chennai kolathur fpl showroom

அதேநேரம், பிரபலமான பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்சனான பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப-நிலை வேரியண்ட்டிற்கு கூட ரூ.60,000 வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த சிறிய அளவிலான டாடா எலெக்ட்ரிக் காரை இந்த டிசம்பர் மாதத்திற்குள் தங்களிடம் வாங்குபவர்கள் அதிகப்பட்சமாக ரூ.1.50 லட்சம் வரையிலான சலுகைகளை பெறலாம் என இந்த ஷோரூம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாடாவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் காரான ஹாரியர் இவி (Harrier EV)-க்கு லேட்டஸ்ட் கார் என்பதினாலேயே ரூ.1 லட்சம் வரையில் சலுகைகள் வழங்கப்படுவதாக இந்த எஃப்பிஎல் டாடா ஷோரூமில் பணியாற்றும் ஊழியர் தெரிவித்துள்ளார். டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ் (Altroz)-க்கு இந்த ஷோரூமில் சுமார் ரூ.1.50 லட்சம் வரையில் சலுகைகள் வழங்கப்படுகிறது.

tata altroz

புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த எஃப்பிஎல் டாடா ஷோரூமில் பழைய ஃபேஸ்லிஃப்ட்-முந்தைய அல்ட்ராஸ் காரும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஷோரூம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொளத்தூர் டாடா ஷோரூமில் மற்ற டாடா கார்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன, இந்த ஷோரூமில் அதிக பேர் வாங்கும் டாடா கார்கள் என்னென்ன என்பது குறித்த கூடுதல் விபரங்களுக்கு கீழேயுள்ள வீடியோவை காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் இதுவரையில் பார்த்த ஷோரூம்களிலேயே இந்த குறிப்பிட்ட டாடா ஷோரூமில் 2025 வருட இறுதியை முன்னிட்டு அதிக மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமீபத்தில் அறிமுகமான டாடா கார்களுக்கு இந்த ஷோரூம் அதிக சலுகைகளை வழங்கி வருவது கவனத்தை ஈர்க்கிறது. இந்த ஷோரூமை போன்று மற்ற டாடா ஷோரூம்களிலும் இவ்வாறு வருட இறுதி சலுகைகள் வழங்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 28, 2025, 5:00 [IST]
English summary
Year ender 2025 tata car offers at chennai kolathur fpl tata showroom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X