இந்த எலெக்ட்ரிக் கார்களுக்காகவே 2025ஐ யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாங்க! உங்களது சாய்ஸ் எது?

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தை ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, முடியும் தருவாயில் உள்ள இந்த 2025ஆம் ஆண்டில், பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மஹிந்திரா, டாடா, எம்.ஜி போன்ற முன்னணி கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார் பிரிவில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தற்போது, வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விலைகளில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்கின்றன. 2025ஆம் ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக் கார்களுள், ஒவ்வொரு பிரிவிலும் முன்னணியில் நிற்கும் மாடல்களை பற்றி இனி பார்க்கலாம்.

எம்ஜி கோமட் இவி (MG Comet EV): பட்ஜெட் பிரிவில் சிறந்த மற்றும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக திகழும் இது, நகர பயன்பாட்டிற்கு ஏற்ற கச்சிதமான காராக நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டுள்ளது. இது ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 230கிமீ தூரம் வரை இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது. கோமட் இவி எலெக்ட்ரிக் காரில் 17.4 kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. ஐபி67 தரச்சான்றிதழ் பெற்ற இந்த பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.2 லட்சம் கி.மீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

top-5 electric car launches in this 2025

இதன் சிறப்பம்சங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, மிதக்கும் எஃபெக்ட் உடன் கூடிய 10.25 இன்ச் இரட்டை திரை அமைப்பு, 55-க்கும் மேற்பட்ட ஐ-ஸ்மார்ட் இணைப்பு அம்சங்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவை அடங்கும். எம்.ஜி கோமட் இவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.49 லட்சம் ஆகும். ஆனால், BaaS (Battery as a Service) திட்டத்தின் கீழ் ரூ.4.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம்.

டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV): கச்சிதமான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில் முன்னிலை வகிக்கும் இந்த காரின் மூலம் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் ஒரு வலுவான தலைவராக உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரான இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் ஆக தற்சமயம் உள்ளது. இது குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது.

top-5 electric car launches in this 2025

30 kWh மற்றும் 45 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் நெக்ஸான் இவி கிடைக்கிறது. இதில் 30 kWh பேட்டரி மூலம் காரின் எலெக்ட்ரிக் மோட்டார் 95 kW ஆற்றல் மற்றும் 215 Nm டார்க் திறனை உற்பத்தி செய்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகபட்சமாக 275 கி.மீ தூரம் வரை செல்லலாம். அதேநேரம், 45 kWh பேட்டரியில் 106 kW ஆற்றல் மற்றும் 215 Nm டார்க் திறனை பெறலாம். இது அதிகபட்சமாக 489 கி.மீ தூரம் வரை காரை இயக்கி செல்லும் என கூறப்படுகிறது.

எம்.ஜி வின்ட்சர் இவி (MG Windsor EV): 2025-இன் குடும்பப் பயன்பாட்டிற்கான சிறந்த எலெக்ட்ரிக் காராக தேர்வு செய்யப்பட்டுள்ள இது, இந்தியாவில் எம்.ஜி நிறுவனத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் தற்போது இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக விளங்கும் இதன் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

top-5 electric car launches in this 2025

அதேநேரம், BaaS திட்டத்தின் கீழ் வின்ட்சர் இவி காரை ரூ.9.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். வின்ட்சர் இவி 38 kWh மற்றும் 52.9 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பெரிய பேட்டரி அதிகபட்சமாக 449 கி.மீ தூரம் வரை இயங்குவதற்கான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. வின்ட்சர் இவி காரில் லிக்யுடு-கூல்டு பேட்டரி அமைப்பு ஆனது ஐபி67 பாதுகாப்பு மற்றும் குளிர் காலங்களுக்கு ஏற்ற பேட்டரி வெப்பமூட்டும் வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் கிடைக்கிறது.

மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6): இந்தியாவின் பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில், 2025ஆம் ஆண்டில் மஹிந்திராவின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்த கார் இதுவாகும். சற்று விலைமிக்க பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிஇ 6 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.90 லட்சம் ஆகும்.

top-5 electric car launches in this 2025

மேற்கூறப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை போலவே, பிஇ 6 காரும் 59 kWh மற்றும் 79 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், சிறிய பேட்டரி அதிகபட்சமாக 557 கி.மீ தூரம் வரை செல்கிறது. அதே நேரத்தில் பெரிய பேட்டரி அதிகபட்சமாக 683 கி.மீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

பிஒய்டி சீலயன் 7 (BYD Sealion 7): இந்தியாவில் தற்போது கிடைக்கும் சிறந்த சொகுசு எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.48.90 லட்சம் ஆகும். இந்த காரின் தட்டையான 82.56 kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 567 கி.மீ தூரம் வரை செல்லலாம்.

top-5 electric car launches in this 2025

இதன் சொகுசு அம்சங்களில் 15.6 இன்ச் சுழலும் காட்சிகளை வழங்கும் தொடுதிரை, 12-ஸ்பீக்கர் டைனாடியோ சவுண்ட் சிஸ்டம், முழு எல்இடி லைட்டிங் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவை அடங்கும். இதைத்தவிர, லெவல்-2 ADAS, 11 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் கொண்ட பிஒய்டி சீலயன் 7, யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறைவடையும் இந்த 2025ஆம் ஆண்டில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் முக்கியமான ஐந்து எலெக்ட்ரிக் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இவ்வாறான தரமான புதிய எலெக்ட்ரிக் கார்களால் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் போட்டி அதிகரித்து வருகிறது. இந்த போட்டி, வரும் 2026ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த 5 எலெக்ட்ரிக் கார்களுள் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 26, 2025, 23:33 [IST]
English summary
Year ender 2025 top 5 electric car launches in this year mg comet ev and tata nexon ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X