பெட்ரோல் நிரப்ப தேவையில்லை என்றாலே ஆட்டோ டிரைவர்களுக்கு பெரிய செலவு இல்ல! சார்ஜ் பண்ணா 227கிமீ-க்கு பயணம்!

லோஹியா ஆட்டோ (Lohia Auto), டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனம். குறிப்பாக, 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களை விற்பனை செய்வதில் வட இந்தியாவில் பிரபலமான நிறுவனமாக லோஹியா விளங்குகிறது. சமீப காலமாக எலக்ட்ரிக் ஆட்டோக்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய லோஹியா துவங்கி உள்ளது.

இத்தகைய நிறுவனத்துடன், யூதா (Youdha) என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனம் கூட்டணி சேர்ந்து தனது முதல் தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த யூதா ஆனது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனமாக மார்க்கெட்டில் களமிறங்கி உள்ளது.

youdha epod electric 3-wheeler auto rickshaw

இந்த யூதா நிறுவனத்தில் இருந்து முதலாவதாக மார்க்கெட்டிற்கு வந்துள்ள எலக்ட்ரிக் வாகனம், EPOD என்கிற எலக்ட்ரிக் 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷா (Auto Rickshaw) ஆகும். லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து யூதா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த EPOD எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா ஆனது இந்தியாவின் எல்5 எலக்ட்ரிக் 3-சக்கர வாகன பிரிவில் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எல்5 எலக்ட்ரிக் 3-சக்கர வாகன பிரிவானது அதிகப்பட்சமாகவே மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே இயங்கக்கூடிய 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களை குறிக்கிறது. இத்தகைய ஆட்டோ ரிக்‌ஷாக்களில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாகவே 250 வாட்ஸ் இயக்க ஆற்றலை மட்டுமே வழங்கும் அளவிற்கு இயக்க திறனை குறைவாக கொண்டதாக உருவாக்கப்படுபவை ஆகும்.

youdha epod electric 3-wheeler auto rickshaw

மேலும், இந்த வகை ஆட்டோ ரிக்‌ஷாக்களின் எடை அதிகப்பட்சமாகவே 1500 கிலோ ஆகவே இருக்கும். இதில் இருந்து, யூதா EPOD எலக்ட்ரிக் ஆட்டோவின் திறன் எத்தகையது என்பது உங்களுக்கு ஓரளவிற்கு ஐடியா கிடைத்து இருக்கும் என நினைக்கிறேன். மேலும், எல்5 பிரிவில் சந்தைப்படுத்தப்படும் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் பயணிகளை மட்டுமின்றி, சரக்கு பொருட்களையும் கொண்டு செல்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.

யூதா நிறுவனத்தின் புதிய EPOD எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவில் 6 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 11.8kWh திறன் கொண்ட லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 227கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என சோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

youdha epod electric 3-wheeler auto rickshaw

சிட்டி (City) மற்றும் பூஸ்ட் (Boost) என்கிற இரு விதமான டிரைவிங் மோட்களை (Driving Modes) கொண்ட இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை அதிகப்பட்சமாக 300மிமீ ஆழமுள்ள நீரிலும் இயக்க முடியும். யூதா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் நீண்ட காலத்திற்கு செயல்படும் வகையில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இதன் மூலமாக, 2030ஆம் ஆண்டிற்குள் குறைந்தப்பட்சம் ரூ.1,000 கோடி வருவாயை ஆவது பார்த்துவிட வேண்டும் என்கிற கொள்கை உடன் யூதா நிறுவனம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லாஸ்ட்-மைல் டெலிவிரிகளுக்கான தேவை அதிகரித்து வருவதினாலும், அரசாங்கங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைத்து வருவதினாலும் எல்5 வகை எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே புதிய EPOD எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை யூதா நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இது ஸ்டார்ட்-அப் நிறுவனம் என்பதால் தமிழ்நாட்டில் இந்த எலக்ட்ரிக் வாகனம் கிடைக்குமா என்பதை ஒருமுறை உறுதி செய்துக் கொள்ளவும்.

Source: Lohia Auto/ Press Release

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 23:59 [IST]
English summary
Youdha launches epod electric 3 wheeler auto rickshaw with partnership of lohia auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X