எத்தனை பேரது தொழிலை மாற்ற போகுதோ...!! டீசல் எல்லாம் தேவையில்ல, மொத்தமும் எலெக்ட்ரிக்!

இந்தியாவின் வர்த்தக பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் 'யுதா' (YOUDHA) நிறுவனம், கனரக பொருட்களை கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'யுதா டிரெவோ' (YOUDHA Trevo) என்கிற மூன்று சக்கர எலெக்ட்ரிக் சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. லாஸ்ட்-மைல் டெலிவரி (Last-mile Delivery) மற்றும் நகரத்திற்குள் ஏற்றுமதி/ இறக்குமதிகளுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் வாகனம், இந்தியாவின் சாலை மற்றும் சுமை நிலைமைகளுக்கேற்ப சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய யுதா டிரெவோவின் விலை ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் சிறு நகர சந்தைகளில் அதிக எடையுள்ள சரக்கு போக்குவரத்தை இலக்காகக் கொண்ட யுதா டிரெவோ 10 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 48 கி.மீ வேகத்தை வழங்குகிறது.

youdha launches trevo

முழு சுமையுடன் வாகனம் இயங்கும்போதும் கூட நம்பகமான செயல்திறனை இந்த மோட்டார் உறுதி செய்கிறது. 11.8 kWh நிலையான பேட்டரி மற்றும் 7.6 kWh மாற்றக்கூடிய பேட்டரி போன்ற பல்வேறு பேட்டரி ஆப்ஷன்களுடன் இந்த வாகனம் கிடைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப யுதா டிரெவோவில் பேட்டரியை தேர்வு செய்து கொள்ளலாம்.

எந்த பேட்டரியை தேர்வு செய்தாலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் வாகனத்தை அதிகப்பட்சமாக 130- 150 கி.மீ தூரம் வரை இயக்கி செல்லலாம். சுமார் 4- 5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம், தினசரி வணிக பயன்பாட்டில் அடிக்கடி சார்ஜ் நிரப்புவதற்காக வாகனத்தை நிறுத்த வேண்டிய நேரத்தைக் குறைக்கலாம். உறுதியான உலோக உடல் அமைப்புடன், டிரெவோ ஆனது ஓட்டுநரின் பாதுகாப்பையும், அனைத்து வானிலை வசதியையும் மேம்படுத்தும் வகையில் கதவுகளுடன் கூடிய முழு அடைக்கப்பட்ட கேபினைக் கொண்டுள்ளது.

youdha launches trevo

மொத்தம் 1,200 கிலோ எடை (GVW) கொண்ட இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில், 4.50-10, 8PR டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிரத்யேக டயர்களின் உதவியுடன் 13 டிகிரி வரை சாய்வுத்தன்மையுடன் கூடிய சாலைகளில் ஏறும் திறனைக் கொண்டிருப்பதால், மேம்பாலங்கள், வளைவுகள் மற்றும் சீரற்ற சாலைகளிலும் இந்த வாகனத்தில் சீராக இயங்க முடியும்.

பொருட்களை வைக்கும் பின்பகுதி ஆனது 140 கன அடி அல்லது 170 கன அடி கொள்ளளவு கொண்ட அரை-தள (Half-deck) அமைப்புகளில் கிடைக்கிறது. வாகனத்திற்குள் டேஷ்போர்டில் CAN-அடிப்படையிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆனது ஒவ்வொரு வினாடியும் வாகனத்தை பற்றிய தகவல்களையும், பழுதுகளை கண்டறியும் அம்சங்களையும் வழங்குகிறது.

youdha launches trevo

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் தயாரிப்பான யுதா எபோட் (EPOD) சந்தையில் பெற்ற நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, டிரெவோவின் அறிமுகம் யுதா நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ஆகும். எபோட் அதன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்பாட்டு நம்பகத்தன்மைக்காக வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ஆரம்பகட்ட வெற்றியைப் பயன்படுத்தி, யுதா இப்போது எலெக்ட்ரிக் சரக்கு வாகனப் பிரிவில் தனது புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய டீசல் (Diesel) எரிபொருள் பயன்படுத்தும் மூன்று சக்கர சரக்கு வாகனங்களுக்கு புதிய யுதா டிரெவோ ஒரு ஆற்றல்மிக்க போட்டியாளராகும். மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் வணிகங்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. டிரெவோவின் உறுதியான வடிவமைப்பு, மேம்பட்ட வாகன தொழில்நுட்பம் மற்றும் பூஜ்ஜிய மாசு உமிழ்வு செயல்திறன் ஆகியவை லாபகரமான வணிக செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 22, 2025, 23:50 [IST]
English summary
Youdha launches new heavy duty l5 electric cargo three wheeler trevo price features all details
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X