கோயம்புத்தூர் தான் முக்கியமான டார்க்கெட்டே! டெல்லியில் இருந்து பக்கா பிளான் உடன் வராங்க

ஜெவோ (ZEVO), டெல்லியை சேர்ந்த எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து அவர்களுக்கு தேவையான எலக்ட்ரிக் வாகனங்களை வழங்குவதுதான் ஜெவோ நிறுவனத்தின் வேலை ஆகும். தற்போதைக்கு வட இந்தியாவில் மட்டுமே நெட்வொர்க்கை கொண்டிருக்கும் ஜெவோ நிறுவனம், தென்னிந்தியாவிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இதில், நமது தமிழ்நாட்டை சேர்ந்த கோயம்புத்தூரும் ஜெவோ நிறுவனத்தின் திட்டத்தில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்களை வாடகை/ குத்தகைக்கு விடும் தொழிலில் கடந்த பல வருடங்களாகவே பல நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு அவ்வாறான நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

zevo expand network to coimbatore

ஜெவோ உள்பட இந்த நிறுவனங்களின் தொடர்புகள் நேரடியாக வணிக நிறுவனம்-வணிக நிறுவனமாகவே இருக்கிறது. அதாவது, பெரும்பாலும் நேரடியாக மக்களுடன் வணிகத்தை மேற்கொள்வது இல்லை. ஜெவோ நிறுவனத்திடம் தற்போதைக்கு குறைவான எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதனை அதிகரிக்கும் முயற்சியில் ஜெவோ ஈடுப்பட்டு வருகிறது.

இதன்படி, அடுத்ததாக 2026 மார்ச் மாதத்திற்குள் சுமார் 10 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை தங்களது சேவையில் இணைக்க உள்ளதாக ஜெவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த 10 ஆயிரம் வாகனங்களில் எலக்ட்ரிக் 2-வீலர்கள், 3-வீலர்கள், 4-வீலர்கள் மற்றும் எலக்ட்ரிக் லாரிகள் உள்ளிட்டவை அடங்கவுள்ளன.

சேவையில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, தனது சேவை வழங்கப்படும் நகரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்திலும் ஜெவோ உள்ளது. இதன்படி, நம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், நாக்பூர், சூரத், இந்தூர், போபால், பாட்னா மற்றும் நாசிக் உள்ளிட்ட நகரங்களில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த ஜெவோ திட்டமிட்டுள்ளது.

தற்சமயம், ஜெவோ நிறுவனம் எலக்ட்ரிக் 3-வீலர்கள் பிரிவில் ஏற்கனவே வலுவான ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதனை எலக்ட்ரிக் 4-வீலர்களுக்கும் கொண்டு செல்வதில் தீவிரமாக உள்ளது. வெவ்வேறு தொழில்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் வாகனங்களை வழங்க வேண்டும் என்பதுதான் ஜெவோ நிறுவனத்தின் கொள்கையாக உள்ளது.

இதுகுறித்து ஜெவோ நிறுவனத்தின் சிஇஓ ஆதித்யா சிங் ரத்னு கூறுகையில், "நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்புடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம் எலக்ட்ரிக் மொபைலிட்டியை மறுவரையறை செய்வதே எங்கள் இலக்காக எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் வாகன குழுவையும், நெட்வொர்க்கையும் விரிவுப்படுத்துவது இவி துறையில் எங்கள் தலைமையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கார்பன் உமிழ்வு இல்லாத லாஜிஸ்டிக்ஸ் தீர்வுகளுக்கான வளர்ந்துவரும் தேவையை பூர்த்தி செய்ய உதவும்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சில நிறுவனங்களை நடத்த வேண்டுமென்றால் நிறைய வாகனங்கள் தேவைப்படும். அவற்றை எல்லாம் விலை புதுசா வாங்குவதை காட்டிலும், வாடகை/ குத்தகைக்கு பெற்றால் கணிசமாக வருவாயை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு தொழிலுக்கு தேவையான வாகனங்களை வழங்கக்கூடிய ஜெவோ நிறுவனம் கோயம்புத்தூருக்கு வருவதால், கோவையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 22:46 [IST]
English summary
Zevo aims to expand its network to coimbatore adding 10000 electric vehicles
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+