பண்டிகை காலத்தில் கார் வாங்கும் முன் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 விஷயங்கள்!

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்கும் வழக்கம் இந்தியர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பண்டிகைகளின் மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் விதத்தில் இந்த புதிய கார் வாங்கும் நடைமுறை பெரும்பாலான குடும்பங்களில் வழக்கமாகிவிட்டது. தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு கார் நிறுவனங்களும், டீலர்களும் பல்வேறு தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், இலவச ஆக்சஸரீஸ் உள்ளிட்ட சலுகைகளை அறிவிக்கின்றனர். இதனால் புதிய கார் வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என்று பலரும் நினைப்பது இயல்பான விஷயமாகவே உள்ளது..

ஆனால், இந்த சமயத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கார் நிறுவனங்களும், டீலர்களும் கடைபிடிப்பதுடன், நிபந்தனைகளுடன் என்ற ஒரு விஷயத்தை வைத்து பெரும்பாலானவற்றை குறைத்துக் கொடுக்கவே முற்படுகின்றன. இந்த சூழலில், பண்டிகை காலத்தில் கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

Maruti Alto

1. ஆன்ரோடு விலை

ஆன்லைன், செய்தி விளம்பரங்கள், விளம்பர போர்டுகளில் பொதுவாகவே காரின் எக்ஸ்ஷோரூம் விலைதான் இடம்பெறுகின்றன. இதனை வைத்து பலர் கணக்குப் போட்டு ஷோரூம் செல்கின்றனர். ஆனால், அங்கு ஆர்டிஓ பதிவுக் கட்டணம், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பிற கட்டணங்கள் சேர்ந்து ஆன்ரோடு விலை என்பது கிட்டத்தட்ட எக்ஸ்ஷோரூம் விலையை விட சில லட்சங்கள் கூடுதலாக இருக்கும். எனவே, ஷோரூமில் ஆன்ரோடு விலையை தெரிந்து கொண்ட பின்னரே உங்களுக்கு அந்த பட்ஜெட் சரியாக வருமா? சமாளிக்க முடியுமா என்பதையும் கருத்தில்கொண்டு முடிவு செய்வது அவசியம்.

2. டிஸ்கவுண்ட் ஆஃபர்

இப்போது சில கார் நிறுவனங்களில் லட்சங்களில் தள்ளுபடி என்று விளம்பரம் செய்கின்றனர். இதனை பார்த்தவுடன் அடித்து பிடித்து ஷோரூம் சென்றால் அங்கு பல நிபந்தனைகளை கூறி, சொற்ப அளவு ஆஃபரை கொடுத்து தலையில் கட்ட பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆஃபரில், கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனல், கார்ப்பரேட் ஆஃபர் என வாடிக்கையாளர்கள் ஒவ்வொருக்கும் ஒரு விதமான ஆஃபரை மட்டுமே பெற தகுதி மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும், இந்த சமயத்தில் நீங்கள் பேரம் பேசுவது நிச்சயம் அதிகபட்ச பலனை பெற உதவும்.

Tata Punch

3. தயாரிப்பு வருடம் முக்கியம்

பண்டிகை காலத்தில் பழைய ஸ்டாக் கார்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. காரின் தயாரிப்பு மாதம் மற்றும் வருடம் என்ன என்பதை VIN நம்பர் மூலமாக சரிபார்க்கலாம். பல மாதங்களாக ஷோரூமில் நிற்கும் காராக இருந்தால், கூடுதல் தள்ளுபடி அல்லது சிறப்பு பலன்கள் கிடைக்குமா என்று பேசலாம். இல்லையெனில், அந்த காரை வாங்குவதை தவிர்க்கலாம்.

Also Read

4. இன்ஸ்யூரன்ஸ் ஒப்பிட்டுப் பாருங்கள்

பெரும்பாலான டீலரில் வழங்கும் இன்ஸ்யூரன்ஸை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம் மட்டுமின்றி coverage, IDV மதிப்பு, Zero Depreciation போன்ற add-on-களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவையில்லாத add-on-களை தவிர்க்க முடியும்.

5. கார் கடன்

பலரும் மாதத் தவணை மிகக் குறைவாக இருந்தால் நல்லது, அதிக திருப்பி செலுத்தும் காலம் குறித்து கவலை கொள்வதில்லை. ஆனால், கடனை திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாக இருந்தால் மொத்த வட்டி மிகவும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில், வட்டி விகிதம், நடைமுறை கட்டணம், முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்தினால், அதற்கான அபாரதத் தொகை ஏதும் செலுத்த வேண்டி இருக்குமா என்பதையும் கவனிப்பது அவசியம்.

Also Read

6. எக்ஸ்சேஞ்ச் மதிப்பு

புதிய கார் வாங்குவதற்காக பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வதாக இருந்தால், டீலர் கொடுக்கும் மதிப்பு பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். எனவே, ஆன்லைன் மூலமாக பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனங்களை அணுகி விலையை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது அவசியம். டீலரைவிட வெளியில் உள்ள பழைய கார் விற்பனை மையங்களில் அதிக மதிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.

7. டெஸ்ட் டிரைவ் கட்டாயம்

கார் நிறுவனத்தின் இணையதளம், மற்றும் யூட்யூப் வீடியோக்களை பார்த்து மட்டும் காரை தேர்வு செய்யாதீர்கள். குடும்பத்துடன் சென்று காரை எடுத்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டுதான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரும் வித்தியாசமான அனுபவங்களை தரும். உங்களுக்கு ஓட்டுநர் இருக்கை வசதியாக உள்ளதா? குடும்பத்தில் உள்ள பிறர் அமர்வதற்கு இருக்கை இடவசதி சரியாக இருக்கிறதா, கார் ஓட்டும்போது வெளிப்புறத்தை நன்கு பார்த்து ஓட்ட முடிகிறதா, ஸ்டீயரிங் சிஸ்டம், ஓட்டுதல் தரம் எவ்வாறு உள்ளது போன்ற பல விஷயங்களை பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும்.

8. பாதுகாப்பு அம்சங்கள்

காரில் எத்தனை ஏர்பேக்குகள் உள்ளன என்பதை மட்டும் பார்க்காமல், ABS, ESC, EBD, TPMS உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் எந்த வேரியண்ட்டில் கிடைக்கின்றன என்பதையும் பாருங்கள். அதிகம் பயன்படுத்தப் போகும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளுங்கள். மேலும், பாதுகாப்பு தரச்சோதனைகளிலும் எடுத்த மதிப்பீடுகளையும் பரிசீலிக்கலாம்.

9. பிடிஐ அவசியம்

பணம் செலுத்தி காரை வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு பிரச்சனை கண்டுபிடிப்பதைவிட, டெலிவிரி எடுப்பதற்கு முன்பே Pre-Delivery Inspection (PDI) என்று சொல்லப்படும் ஆய்வு மிக முக்கியம். அதாவது, உங்களுக்கு கார் குறித்து அவ்வளவு ஐடியா இல்லை என்றாலும், கார் குறித்து நன்கு தெரிந்தவர்களை அல்லது பிடிஐ சேவையை வழங்கும் நபர்களை வைத்து ஆய்வு செய்வதும் மிக அவசியம். பாடி பேனல்கள், பெயிண்ட், டயர்கள், கண்ணாடி பாகங்கள், இன்டீரியர், எஞ்சின், ஓடோமீட்டர் ரீடிங், வின் நம்பர் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்வது இப்போதைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது.

10. மொத்த செலவை கணக்கிடுங்கள்

கார் கடன் வாங்கும்போது மாதத் தவணையை மட்டும் கணக்கிடாமல், மாதாந்திர எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவுகள், காப்பீடு, டயர்கள் மாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களை கணக்குப் போட்டு அதற்கு தக்க முடிவு எடுங்கள். அப்போதுதான் நீங்கள் வாங்கும் காரை உங்களால் தொடர்ந்து சிறப்பாக பராமரிப்பு செய்ய முடியுமா என்பது தெரியும்.

Article Published On: Wednesday, August 19, 2026, 15:55 [IST]
English summary
10 things to check before buying a car this festive season
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X