ஒரே நாளில் 101 கார்கள் டெலிவரி! ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரள விட்ட டாடா ஷோரூம்!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த டாடா சியரா (Tata Sierra) காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. எனவே சுமார் 22 வருடங்களுக்கு பிறகு, டாடா சியரா கார், கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து டாடா சியரா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் கடந்த ஜனவரி மாத மத்தியில் தொடங்கப்பட்டன. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், தற்போது வரை 14 ஆயிரத்திற்கும் அதிகமான டாடா சியரா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

101 Tata Sierra SUVS Delivered On A Single Day

டாடா சியரா காரை, 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு (Bookings) செய்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் காரை டெலிவரி செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒரு சில டாடா டீலர்ஷிப்கள் (Dealerships), மிகவும் பிரம்மாண்டமான டெலிவரி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த டாடா டீலர்ஷிப் ஒன்று வெகு சமீபத்தில் ஒரே நாளில் 100 வாடிக்கையாளர்களுக்கு டாடா சியரா கார்களை டெலிவரி செய்திருந்தது. இதை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்த டாடா டீலர்ஷிப் ஒன்று தற்போது ஒரே நாளில் 101 டாடா சியரா காரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் (YouTube) சேனலில், அந்த வீடியோ (Video) வெளியிடப்பட்டுள்ளது.

New Tata Sierra

டாடா சியரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 105 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் டிசிஏ கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் டாடா சியரா கார் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 158 பிஹெச்பி பவர் மற்றும் 255 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனையும், டாடா சியரா கார் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 116 பிஹெச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் ஏராளமான வசதிகளையும் (Features) டாடா சியரா கொண்டுள்ளது. இதில், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள் பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 3 ஸ்க்ரீன் செட்-அப் (டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் + டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் + முன் பக்க பயணியின் இருக்கைக்கு முன்பு ஒரு திரை) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் ஆரம்ப விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதும், டாடா சியரா காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, March 26, 2026, 14:58 [IST]
English summary
101 tata sierra suvs delivered on a single day in ahmedabad check all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+