கண்காட்சிக்கு வந்தவங்களை மேக்னெட் மாதிரி ஈர்த்த ஹூண்டாய் கார்! இன்னும் கொஞ்ச நாளில் சாலையில் பார்க்கலாம்!

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து புதியதாக மேம்படுத்தப்பட்ட 2026 எலண்ட்ரா கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, காரின் விலைகள் மட்டும் அறிவிக்கப்படாமல், காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன. எலண்ட்ராவின் 8வது ஜென்ரேஷனான இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

தென்கொரியாவின் பூசன் நகரத்தில் 2026ஆம் ஆண்டிற்கான சர்வதேச மொபிலிட்டி கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஜூலை 5ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த மோட்டார் கண்காட்சியில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் உள்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் 8ஆம் தலைமுறை எலண்ட்ரா காரை வெளியீடு செய்துள்ளது.

8th generation hyundai elantra unveiled

ஹூண்டாய் அவாண்டே என்கிற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய எலண்ட்ரா ஆனது முந்தைய 7ஆம் தலைமுறை எலண்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பின் வந்துள்ளது. முந்தைய ஜென்ரேஷனை காட்டிலும் அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எலண்ட்ரா புத்துணர்ச்சியான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிற்நுட்ப வசதிகளும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், எலண்ட்ரா காரின் ஹைப்ரீட் பவர்டிரெயினும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாயின் புதிய இரும்பு டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எலண்ட்ராவில் புதிய பிலேயோஸ் கனெக்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது நன்கு பெரியதாக 14.6 இன்ச்சில் தொடுதிரையை கொண்டுள்ளது.

8th generation hyundai elantra unveiled

1.6 லிட்டர் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இந்த காரில் வழங்கப்படும் ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆனது முன்பை விட 16 எச்பி கூடுதல் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2 லிட்டர் பெட்ரோல் எ்ன்ஜின் உடன் மட்டுமே கூட அறிமுகத்திற்கு பின் புதிய எலண்ட்ரா காரை வாங்கலாம்.

இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் எந்த மேம்பாடுகளும் இல்லை. 4,765மிமீ நீளம், 1,855மிமீ அகலம், 1,425மிமீ உயரம் கொண்ட புதிய எலண்ட்ரா காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2,750மிமீ ஆக உள்ளது. புதிய எலண்ட்ராவின் நீளம் ஆனது முந்தைய ஜென்ரேஷன் எலண்ட்ராவை காட்டிலும் 55மிமீ அதிகமாகவும், அகலம் 30மிமீ அதிகமாகவும் உள்ளது.

புதிய எலண்ட்ராவின் முன்பக்கத்தில் இரண்டாக பிளவுப்பட்ட ஹெட்லைட் செட்-அப், T-வடிவில் DRL-கள், கருப்பு நிறத்திலான ட்ரிம்கள் உடன் முன்பக்க பம்பர், மெல்லியதான துளைகள் உடன் காற்று உள்வாங்கி உள்ளிட்டவையும், பக்கவாட்டில் 18 இன்ச்சில் இரட்டை நிறங்களில் அலாய் சக்கரங்களும் உள்ளன. காரின் பின்பக்கத்தில் C மற்றும் D பில்லர்களுக்கு அருகே பருத்த அமைப்பிலான டிசைன் மாற்றப்பட்டுள்ளது.

காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர் வாத்து வால் போன்றதான டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பாய்லருக்கு கீழே T-வடிவத்தில் LED டெயில்லேம்ப்கள், கருப்பு நிற கிளாடிங் உடன் புதிய டிசைனில் பம்பரும் இடம்பெற்றுள்ளன. காருக்கு உள்ளே முன் இருக்கை பயணி பிடித்துக் கொள்வதற்கான கைப்பிடி நீக்கப்பட்டுள்ளது. 3-ஸ்போக் டிசைனில் இருக்கும் ஸ்டீயரிங் சக்கரத்தில் ஏகப்பட்ட பொத்தான்களை பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் வெளிப்பக்கத்தை போன்று, எலண்ட்ராவின் உட்புறத்திலும் ஏகப்பட்ட புதிய அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது தென்கொரியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய எலண்ட்ரா முதலாவதாக தென்கொரிய நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். அதன் பின்பே, இந்தியாவிற்கான எலண்ட்ரா வெளியீடு செய்யப்பட்டு, பின்னர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

Article Published On: Saturday, June 27, 2026, 17:09 [IST]
English summary
2026 busan international mobility show 8th generation hyundai elantra unveiled
மேலும்... #hyundai #elantra #motor show #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out