28 வருஷமாக விற்பனையில் இருக்கும் காரை அப்கிரேட் செய்த ஹோண்டா! மக்களின் நம்பிக்கையை பெற்ற கார் ரூ.12 லட்சத்தில்

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்டி காருக்கு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் மக்கள் அதிகம் பேர் வாங்கும் ஹோண்டா கார்களுள் ஒன்று, ஹோண்டா சிட்டி ஆகும். இதனாலேயே சிட்டி கார் மாடலை ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மறக்காமல் அப்கிரேட் செய்துவிடும் ஹோண்டா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

2026 honda city facelift launched

இந்தியாவில் 5ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுதான் தற்போது வரையில் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இடையிடையே இவ்வாறு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புற தொழிற்நுட்ப அம்சங்களில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மற்றப்படி, சிட்டி காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. அப்டேட் செய்யப்பட்டுள்ள ஹோண்டா சிட்டி கார் மொத்தம் நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவையாவன, எஸ்வி, வி, இசட்.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ்+ என்பன ஆகும். இவை ஒவ்வொன்றின் விலையும் எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Engine & Transmission SV V ZX ZX+
1.5 Petrol MT Rs 12.00 lakh Rs 13.30 lakh Rs 15.26 lakh Rs 16.15 lakh
1.5 Petrol CVT - Rs 14.30 lakh Rs 16.26 lakh Rs 17.15 lakh
1.5 Strong Hybrid e:HEV - - - Rs 21.00 lakh

வெளிப்புற தோற்றம்: ஹோண்டா சிட்டி காரின் முன்பகுதி முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மெல்லியதான வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஹெட்லைட்களை சுற்றிலும் கண் புருவம் டிசைனில் எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்கள் முன்பை விட பிரகாசமான ஒளியை நீண்ட தொலைவிற்கு வழங்கக் கூடியவைகளாக வழங்கப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. எல்இடி டிஆர்எல்-கள் இரண்டும் லைட் பார் மூலமாக கனெக்ட் செய்யப்பட்டுள்ளன.

முன்பக்க க்ரில் தேன்கூடு டிசைனில் உள்ளது. க்ரில் பகுதிக்கு மேலே முன்பு பளபளப்பான க்ரோம் பேனல்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காற்றை என்ஜின் பெறுவதற்கான காற்றுத்துளைகள் முன்பக்க பம்பரில் முன்பை விட அகலமாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், முன் பம்பரின் பக்கவாட்டிலும் புதியதாக முக்கோண வடிவில் ஏர் இண்டேக் வழங்கப்பட்டுள்ளது.

2026 honda city facelift launched

காரின் பின்பக்கத்தில் இரட்டை நிறத்தில் பம்பர் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் இரு முனைகளிலும் ஒளி எதிரொலிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபாக்ஸ் டிஃப்யூஸர் ஆனது காரின் உடல் நிறத்தில் உள்ளது. இவற்றுடன், 16 இன்ச்சில் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள 2026 ஹோண்டா சிட்டி காரில் புதியதாக கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.

உட்புற அம்சங்கள்: உட்புற கேபினில் புதியதாக 10.1 இன்ச்சில் தொடுத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 360-டிகிரி கேமரா மற்றும் முன்பக்க வெண்டிலேட்டட் இருக்கைகளும் புதிய சிட்டி காரில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. மினி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், கேபினை சுற்றிலும் வண்ண விளக்குகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உள்ளிட்டவை பழைய சிட்டி காரில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஹோண்டா சிட்டி காரின் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி ஸ்ட்ராங் ஹைப்ரீட் ஆப்ஷனிலும் புதிய ஹோண்டா சிட்டியை வாங்கலாம். ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா உள்ளிட்ட புதிய செடான் கார்களின் அறிமுகத்தால் சற்று குறைந்துள்ள ஹோண்டா சிட்டி கார்களின் விற்பனை புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் மீண்டும் அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

Article Corrections

புதியதாக விலை அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது.
Article Published On: Friday, May 22, 2026, 15:56 [IST]
English summary
2026 honda city facelift launched in india check price features all details here
மேலும்... #honda cars #honda city #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out