13.30 லட்ச ரூபாய் ஹோண்டா காரை ஷோரூமில் பார்க்க, வேற லெவலில் இருக்கு! அறிமுகத்தை தொடர்ந்து ஷோரூம் வந்தாச்சு!
புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் வி வேரியண்ட் கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமில் காட்சித் தந்துள்ளது. இதுதொடர்பாக 'அடி ஸோன்' என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அதன் பிரபலமான சிட்டி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஹோண்டா சிட்டி காரின் 5ஆம் தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் நிலையில், அதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையில் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. புதிய ஹோண்டா சிட்டி ஆனது எஸ்வி, வி, இசட்.எக்ஸ், இசட்.எக்ஸ்+ என நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இசட்.எக்ஸ்+ வேரியண்ட் ஆனது ஹைப்ரீட் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்த நான்கு வேரியண்ட்களில் வி வேரியண்ட் ஹோண்டா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முழுவதும் அடர் நீல நிறத்தில் ஜொலிக்கும் இந்த குறிப்பிட்ட சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட வி வேரியண்ட் ஆகும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இந்த காரின் வி வேரியண்ட் கிடைக்கிறது. ஆனால், எண்ட்ரி-லெவல் எஸ்வி வேரியண்ட்டை மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வாங்க முடியும்.

2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமின்றி, ADAS உடன் வாங்குவதற்கும் குறைந்தது நீங்கள் வி வேரியண்ட்டை ஆவது வாங்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் எஸ்வி வேரியண்ட்டில் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி, வி வேரியண்ட்டை கூடுதலாக மீட்டியோராய்ட் கிரே மெட்டாலிக் அல்லது ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் நிறத்தில் வாங்கலாம்.
ஆனால், தற்போது டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சித் தந்துள்ள குறிப்பிட்ட வி வேரியண்ட் ஆனது நீல நிறத்தில் ஜொலிக்கிறது. இதனை 'அப்சிடியன் ப்ளூ பேர்ல்' கலர் ஆப்ஷன் என ஹோண்டா நிறுவனம் அழைக்கிறது. இந்த நீல நிறத்தில் எண்ட்ரி-லெவல் எஸ்வி வேரியண்ட்டையும் வாங்கலாம். சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் வி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.29 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
எஸ்வி வேரியண்ட்டை காட்டிலும் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் வி வேரியண்ட்டில் சில அம்சங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. அதன்படி காரின் வெளிப்புறத்தில் Z-வடிவில் முனைகளை கொண்ட எல்இடி டெயில்லேம்ப்கள் தெளிவான லென்ஸ் உடனும், பளபளப்பான கருப்பு நிற டிரங்க் பகுதி ஆனது மத்தியில் மோல்டிங் உடனும் உள்ளது.
பல்வேறு ஸ்போக்குகளை கொண்ட 15-இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த வேரியண்ட்டில் கிரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. காருக்குள் உட்புற கதவு கைப்பிடிகள் க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக கிடைக்கும். தொழிற்நுட்ப அம்சங்களாக, நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் ஹோண்டா கனெக்ட், அலெக்ஸா சப்போர்ட் & ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவற்றை வி வேரியண்ட்டில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரை போதுமான பிரீமியம் அம்சங்களுடன் வாங்குவதற்கு வி வேரியண்ட் ஏற்றதாகும். எஸ்வி வேரியண்ட்டிற்கு இந்த வேறியண்ட்டிற்கும் விலையில் சுமார் ரூ.1.30 லட்சம் அளவிற்கு வித்தியாசம் உள்ளதை மறக்க வேண்டாம். வி வேரியண்ட்களுடன் சேர்த்து புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் மற்ற வேரியண்ட்களும் அடுத்தடுத்ததாக டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications