புதிய சிட்டி காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கவே இல்ல! அசத்தியுள்ள ஹோண்டா!

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தில் இருந்து புதியதாக சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.11.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும், பழைய சிட்டி உடன் ஒப்பிடுகையில் எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் பல தசாப்தங்களாக விற்பனையில் இருக்கும் மிகவும் சில ஹோண்டா கார்களுள் ஒன்று, சிட்டி ஆகும். தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் வகை கார்களுக்கு வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவரும் போதிலும் ஹோண்டா சிட்டிக்கு ஓரளவிற்கு சுமாரான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் ஒவ்வொரு மாதத்திலும் தொடர்ந்து கிடைத்து வருகின்றனர்.

2026 Honda City Facelift

இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் சிட்டி காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சிட்டி காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்து பக்கங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான ஐந்து அம்சங்கள் கவனிக்கத்தக்கவை ஆகும். அவையாவன...

வெளிப்புறம்: 2026 சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் முற்றிலும் புதிய வெளிப்புறத்தை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டிஆர்எல் லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட பை-எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள், கருப்பு நிற மேட்ரிக்ஸ் மெஷ் க்ரில், பொசிஷன் மாற்றப்பட்ட ஹோண்டா லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. நீளத்திலும் முன்பை விட 11மிமீ நீளமாக்கப்பட்டு உள்ள புதிய சிட்டி காரில் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

2026 Honda City Facelift

உட்புற தோற்றம் & வசதிகள்: ஐவோரி மற்றும் கருப்பு என்கிற ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் புதிய ஹோண்டா சிட்டியின் உட்புறம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சிறப்பம்சங்களாக, பின்பக்கத்தில் லான்ச் இருக்கைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், வயர்லெஸ் போன் சார்ஜர், சன்ரூஃப், காரை விட்டு விலகினால் தன்னிச்சையாக கார் லாக் ஆகிக் கொள்ளும் சிஸ்டம் மற்றும் ரிமோட் ஏசி செயல்பாடுகள் உள்ளிட்டவை புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

கலர் ஆப்ஷன்கள்: 2026 சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அவையாவன, ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், அப்சிடியன் ப்ளூ பேர்ல், மீட்டியோராய்ட் கிரே மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், பிளாட்டினம் வெள்ளை பேர்ல் மற்றும் முற்றிலும் புதிய கிரிஸ்டல் கருப்பு பேர்ல் என்பன ஆகும்.

பாதுகாப்பு அம்சங்கள்: சிட்டி காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் கூடுதலாக 360-டிகிரி கேமரா புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து, லெவல்-2 அடாஸ், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் வைகல் ஸ்டெபிலிட்டி அசிஸ்ட் உள்ளிட்டவை பழைய சிட்டி காரில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளன.

விலை: புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், e:HEV என்கிற ஹைப்ரீட் காரின் விலை கீட்டத்தட்ட ரூ.1 லட்சம் அளவிற்கு அதிகமாக ரூ.20.99ன் லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டி கார் மாடல்கள் உடன் ஒப்பிடுகையில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை சற்று அதிகமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்த 5 சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும்போது, இது மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பை பெறும் என்பது உறுதி. இருப்பினும், முந்தைய தொகுப்பு ஒன்றில் பார்த்தப்படி, மற்ற போட்டி கார்களுடன் ஒப்பிடுகையில் தொழிற்நுட்ப அம்சங்களிலும், என்ஜின் ஆப்ஷன்களிலும், விலையிலும் 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் கார் சற்று பின்தங்கியே உள்ளதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

Article Published On: Sunday, May 24, 2026, 13:37 [IST]
English summary
2026 honda city facelift new features from old city model check all details here
மேலும்... #honda #honda city #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+