அம்பாஸிடர் அளவுக்கு பிரபலம்! இந்தியாவில் தனது முதல் காருக்கு புதிய அவதாரம் குடுத்த ஹோண்டா! 22ம் தேதி லான்ச்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). மிட்-சைஸ் செடான் (Mid-size Sedan) ரகத்தை இந்த கார், இந்திய சந்தையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

இதில், ஹூண்டாய் வெர்னா காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களும் விற்பனைக்கு தயாராகி வருகின்றன.

Honda City

எனவே ஹோண்டா நிறுவனமும் சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் மே 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு, ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் வர தொடங்கியுள்ளது. Aryanverse என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள ஒரு ஹோண்டா டீலர்ஷிப்பில் சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

2026 Hyundai Verna

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

அதே நேரத்தில் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபக்கம் ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, 360 டிகிரி கேமரா, கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப் போன்ற வசதிகளும், 2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் அதே மே 22ம் தேதி, இந்த காரின் ஹைப்ரிட் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2026 ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இதன் பவர் அவுட்புட் 124 பிஹெச்பி மற்றும் 253 என்எம் டார்க் ஆக இருக்கும். இதன் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் மட்டும் வழங்கப்பட்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, அதன் போட்டி மாடல்களுக்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்னர், ஹோண்டா சிட்டி காரின் விற்பனை எண்ணிக்கை உயரலாம் எனவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்த முதல் கார் என்ற பெருமை சிட்டிக்கு உள்ளது (1998ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது). சௌகரியமான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.

Article Published On: Monday, May 18, 2026, 14:04 [IST]
English summary
2026 honda city facelift starts reaching dealerships video
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+