ஷோரூமில் கம்பீரமாக நிற்கும் புதிய ஹூண்டாய் கார்! 8 லட்ச ரூபாய் கூட விலை இல்லை!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்டர் (Exter) கார் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மார்க்கெட்டில் எக்ஸ்டர் காரை இன்னும் அதிக காலத்திற்கு விற்பனை செய்யும் முயற்சியாக இந்த அப்கிரேடை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இப்போது விஷயம் என்னவென்றால், 2026ஆம் ஆண்டிற்கான அப்டேட்டை பெற்ற புதிய எக்ஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன.

அதற்கு சாட்சியாக, டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு வருகை தந்துள்ள எக்ஸ்டர் காரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்த குறிப்பிட்ட கார் ஆனது புதிய எக்ஸ்டரின் மிட் வேரியண்ட்டான எச்.எக்ஸ்6 (HX6) ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், புதிய எக்ஸ்டர் காரின் பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட எச்.எக்ஸ்6 வேரியண்ட் இதுவாகும்.

2026 hyundai exter at showrooms

2026 ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.5.79 லட்சத்தில் இருந்து ரூ.9.42 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், ஆரம்ப விலையான ரூ.5.79 லட்சத்தில் எச்.எக்ஸ்2 பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் கிடைக்கும். அதுவே, ரூ.9.42 லட்சத்தில் எச்.எக்ஸ்10 பெட்ரோல் ஏஎம்டி (AMT) வேரியண்ட் கிடைக்கும்.

டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழக்கம்போல் புதிய எக்ஸ்டருக்கு வழங்கப்படவில்லை. ஆனால், சிஎன்ஜி (CNG) ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் எச்.எக்ஸ்6 மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களில் நீங்கள் பார்க்கும் புதிய எக்ஸ்டர் எச்.எக்ஸ்6 காரின் நிறம் ஆனது ரேஞ்சர் காக்கி (Ranger Khaki) என அழைக்கப்படுகிறது.

2026 hyundai exter at showrooms

இந்த நிறம், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடுக்கு முந்தைய எக்ஸ்டர் காரிலும் வழங்கப்பட்டது. புதிய எக்ஸ்டரின் மிட் வேரியண்ட்டான எச்.எக்ஸ்6-இல் முக்கிய சிறப்பம்சமாக டாஷ்கேம் (Dashcam) எனப்படும் டாஷ்போர்டில் கேமரா வழங்கப்படுகிறது. தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்துள்ள இந்த புதிய எக்ஸ்டர் எச்.எக்ஸ்6 காரின் வெளிப்புறத்தில் புதிய கிரில், புதிய பம்பர், H-வடிவில் எல்இடி டிஆர்எல்-கள், ஹலோஜன் புரோஜெக்டர் ஹெட்லைட்கள், கவர்கள் உடன் இரும்பு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

மேலும், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் காரின் பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், காரின் பின்பக்கத்தில் H-வடிவில் எல்இடி டெயில்லைட்கள், பாடி கிளாடிங், சென்சார்கள், சுறா துடுப்பு வடிவிலானா ஆண்டெனா உள்பட ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், எக்ஸ்டர் காரின் டாப் எச்.எக்ஸ்10 வேரியண்ட்டில் கிடைக்கும் பின்பக்க ஸ்பாய்லரை இந்த வேரியண்ட்டிலும் பார்க்க முடிகிறது.

உட்புறத்தில், இந்த எச்.எக்ஸ்6 வேரியண்ட் புதிய நேவி நிறத்திலான கேபினை கொண்டுள்ளது. உட்புற கதவு கைப்பிடிகள் சில்வர் நிறத்தில் இருக்க, இருக்கைகள் பழுப்பு நிறத்திலான அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளது. இவற்றுடன், இருக்கைகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய இரு தலையணைகள், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வெண்ட்கள் மற்றும் டைப்-சி சார்ஜிங் வசதியும் உள்ளது. இருப்பினும், பின் இருக்கை வரிசையில் ஆர்ம்ரெஸ்ட் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே எந்தவொரு காரிலும் மிட் வேரியண்ட்கள் அடிப்படையான அம்சங்களுடன், சில ஆடம்பர அம்சங்களையும் கொண்டிருக்கும். அதன்படி, புதிய எக்ஸ்டர் காரிலும் எச்.எக்ஸ்6 வேரியண்ட்டில் டாப் வேரியண்ட்களில் கிடைக்கக்கூடிய சில வசதிகள் இடம்பெற்றுள்ளன. ரூ.10 லட்சத்திற்குள் வாங்குவதற்கு எக்ஸ்டர் எச்.எக்ஸ்6 ஏற்ற காராகும். இதேபோன்று, புதிய எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களை டீலர்ஷிப் ஷோரூம்களில் காண ஆவலாக உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2026, 10:41 [IST]
English summary
2026 hyundai exter starting to arrive at dealership showrooms mid hx6 variant spotted
மேலும்... #hyndai #suv car #car showroom #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+