ஜீப் அவெஞ்சர் காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம்.. பெட்ரோல், ஹைபிரிட், எலெக்ட்ரிக் எல்லாமே இருக்கு!

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் காம்பேக்ட் எஸ்யூவி காரான அவெஞ்சரை அப்டேட் செய்துள்ளது ஜீப். 2026ம் ஆண்டிற்கான அப்டேட்டாக இதனை வழங்கியிருக்கிறது. முதன் முதலில் 2022ல் வெளியிடப்பட்ட இது தான் ஜீப் நிறுவனத்தின் சிறிய எஸ்யூவியாக உலகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஜீப் கார்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் பெரிய எஸ்யூவி மாடல்கள் தான்.

இந்தியாவில் காம்பஸ், மெரிடியன், ரேங்ளர் மற்றும் கிராண்டு செரோக்கீ ஆகிய எஸ்யூவி மாடல்களையே ஜீப் விற்பனை செய்து வருகிறது. இதில் காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகியவை மாஸ் மார்க்கெட் எஸ்யூவிக்களாக ரூ.25 லட்சத்திற்குள்ளான விலையிலும், ரேங்ளர் மற்றும் கிராண்டு செரோக்கீ ஆகியவை ரூ.60 லட்சத்திற்கு மேலான விலையில் ப்ரீமியமான எஸ்யூவி மாடல்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. சரி, ஜீப் வெளியிட்டிருக்கும் மேம்படுத்தப்பட்ட புதிய அவெஞ்சர் என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறதெனப் பார்க்கலாம்.

Jeep Avenger

வடிவமைப்பில் பல்வேறு வகையிலும் 2026ம் ஆண்டிற்கான புதிய அவெஞ்சர் எஸ்யூவியை ஜீப் அப்டேட் செய்துள்ளது. முந்தைய அவெஞ்சர் மாடலுடன் ஒப்பிடும் போது முகப்புப் பக்கத்தில் நிறையவே மாற்றங்களை நாம் பார்க்க முடிகிறது. முகப்பில் கிரில், பம்பர் மற்றும் முகப்பு விளக்குகள் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. கிளாடிங்கின் நடுப்பகுதி சற்று ஏற்றி வைக்கப்பட்டு, ஏர் டக்ட்களையும் உள்ளடக்கி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து காரை புதிதாகக் காட்டுகிறது.

ஃபேஸ்லிப்ட் அப்டேட்டின் போது மெக்கானிக்கலாக கார்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உலகளவில் இந்தக் காரில் பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின்களை ஜீப் கொடுத்திருக்கிறது. அனைத்து பவர்ட்ரெயின்களையும் புதிய 2026ம் ஆண்டு அப்டேட்டட் அவெஞ்சர் மாடலிலும் நாம் பார்க்கலாம். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிட்ரன் C3 ஹேட்ச்பேக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் சற்று ட்யூன் செய்யப்பட்டு இந்த ஜீப் அவெஞ்சரிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Jeep Avenger

ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் கீழேயே ஜீப் மற்றும் சிட்ரன் ஆகிய பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. எனவே சிட்ரனில் நாம் பார்க்கும் இன்ஜினே ஜீப் அவெஞ்சரின் பெட்ரோல் வெர்ஷனிலும் உள்ளது. இந்த இன்ஜினானது 100 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. சிட்ரனிலும் இந்த இன்ஜின் பட்டாசாக இருக்கும் என்றே சிட்ரன் C3-யை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இன்ஜினுடன் அவெஞ்சரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹைபிரிட் அவெஞ்சர் மாடலில், மேற்கூறிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 29 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கும். அவெஞ்சர் EV மாடலில், 156 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதியுடன் கொடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்கு பவர் கொடுக்க 54 kWh பேட்டரி பேக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினானது 400 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தக் காரைப் பற்றித் தெரிந்தவுடன் இது இந்தியாவில் வெளியாகுமா என்ற கேள்வி தான் அனைத்து வாடிக்கையாளர்கள் மனதிலும் எழும். இந்தக் காரை ஜீப் இந்தியாவிற்குக் கொண்டு வரும் வாய்ப்புகள் இல்லை. 4,087 மிமீ நீளத்தில் இருக்கும் இந்தக் காரை சற்று மறுவடிவமைப்பு செய்தால் சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவிலேயே ஜீப் நிறுவனத்தால் வெளியிட முடியும்.

ஆனால், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் விலையில் வெளியிட முடியுமா என்பது கேள்விக்குறி தான். மேலும் பட்ஜெட் மீது அதிக பற்று கொண்ட இந்திய வாடிக்கையாளர்களிடம் குறைவான விலை கொண்ட காரை வெளியிட ஜீப் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களால் முடியாது என்பது தான் உண்மை. இப்போது ஜீப்பின் குறைவான விலை கொண்ட காரை வாங்க வேண்டும் என்றால் காம்பஸ் தான் ஒரே சாய்ஸ். ரூ.17.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Article Published On: Thursday, April 30, 2026, 21:54 [IST]
English summary
2026 jeep avenger compact suv model updated what are the new features
மேலும்... #jeep #cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+