5 பேர் மட்டும்தான் போக முடியும்னு சொன்னாலும், பொலேரோ அளவுக்கு உள்ளே இடவசதி... ரூ.8.40 லட்சத்தில் கியா கார்
கியா (Kia) நிறுவனம் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்த போதிலும் பெரியதாக சோபிக்காமல் போன காராக சிரோஸ் (Syros)-ஐ சொல்லலாம். நன்கு விசாலமான உட்புற கேபின் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்ட போதிலும், ஏனோ மற்ற கியா கார்கள் அளவிற்கு கூட சிரோஸ் விற்பனையாகவில்லை. இந்த நிலையில், சிரோஸ் காரை கியா நிறுவனம் அப்கிரேட் செய்து ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று அறிமுகம் செய்துள்ளது.
புதிய கியா சிரோஸ் காரில் புதிய டிசைனில் பம்பர்கள், புதிய அலாய் சக்கரங்கள், புதிய கலர் ஆப்ஷன்கள், டீசல் என்ஜின் உடன் முதல்முறையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் என ஏகப்பட்ட புதிய அப்கிரேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய சிரோஸில் நான்கு புதிய வேரியண்ட்களை கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவை ஒவ்வொன்றிலும் என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பது குறித்து இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

எச்.டி.இ (HTE): கியா சிரோஸ் காரின் புதிய விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும். இதில், 12.3 இன்ச்சில் டச் ஸ்க்ரீன், 12 இன்ச்சில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை, 4 ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, 6 ஏர்பேக்குகள், ஆரஞ்சு நிற ஹைலைட்கள் உடன் கருப்பு & கிரே என இரு நிறங்களில் கேபின் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக கிடைக்கும்.
எச்.டி.இ (ஆப்ஷ்னல்) (HTE (O)): மேலே பார்த்த எச்டிஇ வேரியண்ட்டில் கிடைப்பனவற்றுடன் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் (டீசல் வேரியண்ட்டிற்கு மட்டும்), உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் சீட், 2 ட்விட்டர்ஸ் மற்றும் டயர்களில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவை கிடைக்கும். இந்த வேரியண்ட்டை 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் வாங்கலாம். ஆனால், எச்டிஇ வேரியண்ட்டை போன்று இதுவும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்காது.

எச்.டி.கே+ (ஆப்ஷ்னல்) (HTK+ (O)): மேற்கூறப்பட்ட இரு வேரியண்ட்களில் இல்லாத அம்சங்களாக இதனை டபுள்-பேன் பனோராமிக் சன்ரூஃப், 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control), மேற்கூரையில் பளபளப்பான கருப்பு நிறத்தில் ரூஃப் ரெயில்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவற்றை கூடுதலாக பெறலாம்.
மேலும், இந்த வேரியண்ட்டில் பின் வரிசை இருக்கைகள் சாய்க்கக் கூடியவைகளாகவும், மடிக்கக் கூடியவைகளாவும் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் பெட்ரோல் என்ஜினை மேனுவல் அல்லது டிசிடி (DCT) கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பெறுவதை போன்று, டீசல் என்ஜினையும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பெறலாம்.
எச்.டி.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (HTX (O)): புதிய சிரோஸ் காரின் டாப் வேரியண்ட்டான இதனை நியான் பிரேக் காலிபர்கள் உடன் 17-இன்ச் க்ரிஸ்டல்-கட் அலாய் சக்கரங்கள், 16 வசதிகள் அடங்கிய லெவல்-2 அடாஸ் (ADAS), 360-டிகிரி கேமரா மற்றும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவற்றை பிரத்யேகமாக பெறலாம். இந்த வேரியண்ட்டை பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடன் பெறலாம். ஆனால், இரு என்ஜினையும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே பெற முடியும்; மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதுவும் கிடைக்காது.
விலைகள்: 2026 கியா சிரோஸ் காரின் புதிய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆக ரூ.8,39,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் புதிய எச்டிஇ வேரியண்ட் கிடைக்கும். எச்.டி.இ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் விலைகள் ரூ.9,19,900 மற்றும் ரூ.9,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எச்.டி.கே+ (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் விலைகள் ரூ.11,99,900-இல் இருந்து ரூ.13,99,900 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எச்.டி.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டின் விலைகள் ரூ.14,99,900 மற்றும் ரூ.15,79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட போது கிடைத்த வரவேற்பிற்கு பிறகு சிரோஸின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், உண்மையில் அருமையான எஸ்யூவி (SUV) ரக கார் இதுவாகும். எஸ்யூவி கார் என கூறப்பட்டாலும், எம்பிவி கார்கள் அளவிற்கு இது உட்புறத்தில் விசாலமான இடவசதியை வழங்குகிறது. தற்போது 2026ஆம் ஆண்டை முன்னிட்டு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதால் இதன் பின்னராவது கியா சிரோஸின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








