வெறும் 5.81 லட்சத்திற்கு புத்தம் புதிய 7 சீட்டர் கார்! இந்திய மார்க்கெட்டை மிரள விட்ட வெளிநாட்டு நிறுவனம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார்களில் ஒன்றாகும். ரெனால்ட் ட்ரைபர் காரின் பிரபலத்திற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

ட்ரைபர் காரை இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆக்குவதற்காக ரெனால்ட் நிறுவனம் அதை தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் கடந்த 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2026 Renault Triber

அதற்குள்ளாக ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரை தற்போது மீண்டும் ஒரு முறை அப்டேட் செய்து அசத்தியுள்ளது. 2026 ரெனால்ட் ட்ரைபர் கார் அத்தென்டிக் (Authentic), எவால்வேசன் (Evolution), டெக்னோ (Techno) மற்றும் எமோஷன் (Emotion) என மொத்தம் 4 (Variants) கிடைக்கும்.

இந்த அனைத்து வேரியண்ட்களிலும் இனி ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் 2வது வரிசை இருக்கைகளை முழுமையாக மடக்கி வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் 3வது வரிசை இருக்கைகளுக்கு செல்வது இனி எளிமையான விஷயமாக இருக்கும். அத்துடன் 2வது வரிசை இருக்கைகளை தற்போது முழுமையாக மடக்கி வைத்து கொள்ள முடியும் என்பதால், பூட் ஸ்பேஸ் (Boot Space) 1,065 லிட்டர்களாக உயர்ந்துள்ளது.

Nissan Gravite

அத்துடன் எவால்வேசன் வேரியண்ட்டின் ஸ்டியரிங் வீலிலேயே ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டெக்னோ வேரியண்ட்டில், டிரைவர் இருக்கைக்கு ஆர்ம்ரெஸ்ட், டிரைவர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, ரியர் டீஃபாகர், மூன்றாவது வரிசையில் 12V சாக்கெட் மற்றும் முன் பகுதியில் 2 ட்வீட்டர்கள் போன்ற வசதிகள் (Features) எல்லாம் தற்போது புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் எமோஷன் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தந்த வேரியண்ட்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வசதிகள் அப்படியே தொடரும். அதேபோல் ரெனால்ட் நிறுவனம் இன்ஜின் ஆப்ஷனிலும் (Engine Option) மாற்றம் எதையும் செய்யவில்லை.

பழைய மாடலில் வழங்கப்பட்டு வந்த அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2026 ரெனால்ட் ட்ரைபர் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 21 பாதுகாப்பு வசதிகள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்டரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2026 ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.81 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 8 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்க்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, இன்னமும் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை ரெனால்ட் ட்ரைபர் தக்க வைத்து கொண்டுள்ளது. நிஸான் க்ராவைட் (Nissan Gravite) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

ஃபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் அடுத்த அப்டேட்டில், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்களை செய்யவுள்ளது. இதன்படி இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டுள்ள டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை ரெனால்ட் ட்ரைபர் பெறவுள்ளது. அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. இதன் சிஎன்ஜி டேங்க் பாடிக்கு (Body) கீழே பொருத்தப்பட்டிருக்கும் என்பதால், லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான இடவசதியில் சமரசம் செய்ய வேண்டியதில்லை.

Article Published On: Wednesday, April 29, 2026, 18:09 [IST]
English summary
2026 renault triber 7 seater mpv launched with new features price and more details
மேலும்... #renault #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+