மஹிந்திராவிற்குப் போட்டியாக புதிய எஸ்யூவியை வெளியிட்டுள்ள நிறுவனம்.. வசதிகள் எல்லாம் அட்டகாசமா இருக்கு

ஸ்கோடா நிறுவனமானது 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட கோடியாக் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 36.99 லட்சம் என்ற தொடக்க விலையில் இந்த அப்டேட் செய்யப்பட்ட 5/7 சீட்டர் எஸ்யூவி வெளியாகியிருக்கிறது. அப்டேட்டிற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய, குறிப்பிடதக்க புதிய அம்சங்களை 2026 கோடியாக் காரில் ஸ்கோடா கொடுத்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட கார் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக நாம் பார்க்கலாம்.

இந்த ப்ரீமியம் எஸ்யூவி காரை லாஞ்சு, ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் L&K என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா. இதில் அடிப்படையான லாஞ்சு (Lounge) வேரியன்டில் புதிதாக எந்தவிதமான வசதிகளும் கொடுக்கப்படவில்லை. ஆனால், மற்ற வேரியன்ட்களில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டதன் பொருட்டு இந்த அடிப்படை வேரியன்டின் விலையை ஸ்கோடா குறைத்திருக்கிறது.

Skoda Kodiaq

இதுவரை 39.99 லட்சம் ரூபாய் என்ற விலையில் லாஞ்சு வேரியன்ட் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி 3 லட்சம் ரூபாய் குறைவாக 36.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவே ஸ்டாண்டர்டு கோடியாக் எஸ்யூவியின் தொடக்கநிலை விலையாகவும் இருக்கும். 2026ம் ஆண்டிற்கான அப்டேட்கள் எல்லாம் மற்ற இரண்டு வேரியன்ட்களிலேயே செய்யப்பட்டுள்ளன.

மற்ற இரண்டு வேரியன்ட்களிலும் குறிப்பிடத்தக்க அம்சமாக லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சத்தை தற்போது கொடுத்துள்ளது ஸ்கோடா. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அடாப்டிவ் முகப்பு விளக்குகள், ஃப்ரண்டல் பிரேக்கிங் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்டு ஸ்பாட் டிடெக்ஷன், ரியர் டிராஃபிக் அலர்ட், எக்ஸிட் வார்னிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் ADAS-ன் ஒரு பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Skoda Kodiaq SUV

இந்த ADAS பாதுகாப்பு அம்சங்களுடன் இடைநிலை ஸ்போர்ட்லைன் வேரியன்டில் 360 டிகிரி கேமரா மற்றும் கிரில்லில் LED ஸ்ட்ரிப் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக இந்த இரண்டு அம்சங்களும் டாப் எண்டான செலக்ஷன் L&K வேரியன்டில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூடுதல் அம்சங்களுடன் இடைநிலை ஸ்போர்ட்லைன் வேரியன்டின் விலையும் 1 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து, இனி 44.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

டாப் எண்டான செலக்ஷன் L&K வேரியன்டில் ADAS மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் விலையும் 50,000 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இனி இந்த டாப் எண்டு வேரியன்ட் 46.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மூன்று வேரியன்ட்களில் அடிப்படையான லாஞ்சு வேரியன்டை 5 சீட்டராகவும், மற்ற இரண்டு வேரியன்ட்களை 7 சீட்டராகவும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

மெக்கானிக்கலாக 2026 கோடியாக் எஸ்யூவியில் எந்த மாற்றமும் இல்லை. 204 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் அப்டேட் செய்யப்பட்ட மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயினுடன் கோடியாக்கின் மூன்று வேரியன்ட்களிலும் ஆல் வீல் டிரைவ் வசதியை ஸ்கோடா ஸ்டாண்டர்டாகக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடியாக் மாடலின் அடிப்படை வேரியன்டை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறந்த நேரமாகும். மற்ற இரண்டு வேரியன்ட்களின் விலை சற்று கூடியிருந்தாலும், கூடிய மதிப்பிற்கேற்ப பாதுகாப்பு அம்சங்களை நாம் பெற முடிகிறது. இதனால் இவ்வளவு நாட்கள் கோடியாக்கை வாங்காமல் முடிவைத் தள்ளிப் போட்டு வந்தாலும் நல்லது தான். இந்த புதிய வசதிகள் வேண்டாம் குறைவான விலையில் வேண்டும் என்பவர்கள் ஸ்டாக்கில் இருக்கும் பழைய கோடியாக்கை கூடுதல் சலுகைகளுடன் வாங்கலாம்.

Article Published On: Monday, May 11, 2026, 15:10 [IST]
English summary
2026 skoda kodiaq launched with adas safety features check all details here
மேலும்... #skoda #suv #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+