மொத்த இந்தியாவையும் மிரள விட்டுட்டாங்க! இனி அதிக மைலேஜ் வேணும்னா டொயோட்டா காரைதான் எல்லாரும் வாங்க போறாங்க!

இந்தியாவில் ஹைப்ரிட் கார்கள் (Hybrid Cars) தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் (Mileage) வழங்குவதுதான் இதற்கு காரணம். ஹைப்ரிட் கார்களில் வழக்கமான ஐசி இன்ஜின் உடன் (பெட்ரோல்/டீசல்), எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டிருக்கும்.

அதாவது ஹைப்ரிட் கார்கள் என்பவை, வழக்கமான ஐசி இன்ஜின் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் கலவை ஆகும். வழக்கமான எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் ஹைப்ரிட் கார்களில் அப்படி கிடையாது. அவற்றின் பேட்டரி சுயமாகவே சார்ஜ் ஆகி கொள்ளும்.

Toyota Urban Cruiser Hyryder Interior Design

ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் இன்ஜின் பவர் மூலம் அவை ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் ஆகி விடும். எனவே வழக்கமான எலெக்ட்ரிக் கார்களை போல் அல்லாமல், ஹைப்ரிட் கார்களை தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. இந்த செட்-அப் காரணமாகவே ஹைப்ரிட் கார்கள் அதிக மைலேஜ் வழங்குகின்றன. இதன் காரணமாகவே அவற்றுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவின் ஹைப்ரிட் கார் சந்தையை பொறுத்தவரையில், டொயோட்டா (Toyota) நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. தற்போதைய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross), டொயோட்டா கேம்ரி (Toyota Camry) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) ஆகிய கார்களில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

Toyota Innova Hycross

இந்த சூழலில் ஹைப்ரிட் கார் விற்பனையில் டொயோட்டா நிறுவனம் தற்போது புதிய மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது. இந்திய சந்தையில் 3 லட்சம் ஹைப்ரிட் கார்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். இது குறித்து டீம் பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் ஹைப்ரிட் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16.77 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஹைப்ரிட் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 26.76 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களும் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் பெட்ரோல் வெர்ஷனும் வழங்கப்படுகிறது. எனவே இவற்றின் ஹைப்ரிட் வெர்ஷன்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்களின் விலையை மட்டும் நாங்கள் இங்கே தனியாக குறிப்பிட்டுள்ளோம்.

மறுபக்கம் டொயோட்டா கேம்ரி மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஆகிய 2 கார்களிலும் ஹைப்ரிட் வெர்ஷன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதில், டொயோட்டா கேம்ரி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 47,48,200 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1,19,73,400 ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். டொயோட்டா நிறுவனம் எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் ஹைப்ரிட் கார் சந்தையில் டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள், ஹைப்ரிட் வாகனங்களை தேர்வு செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Tuesday, May 19, 2026, 16:56 [IST]
English summary
3 lakh toyota hybrid cars sold in india urban cruiser hyryder innova hycross camry vellfire
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+