இந்த 4 காருக்கு தான் நாடே வெயிட்டிங்! என்ன காரெல்லாம் வருது தெரியுமா?
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு சிறப்பான விற்பனையை பெற்றது. பல்வேறு புதிய அறிமுகங்கள் கடந்த வருடம் நிகழ்ந்தன. இதன் காரணமாக நிறுவனம் ஹூண்டாக மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே அதிக வாகனங்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக உருவெடுத்தது. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் விற்பனையில் இந்நிறுவனம் தான் மார்க்கெட்டில் அதிக எலெக்ட்ரிக் காரர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது.
இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன செண்டிமெண்ட் கடுமையான போட்டி அதிகரித்து வருகிறது. இதை எதிர்கொள்வதற்காக டாடா நிறுவனம் பல புதிய தயாரிப்புகளை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி நான்கு புதிய டாடா எலெக்ட்ரிக் கார்கள் இந்த ஆண்டு அறிமுகமாக உள்ளன. இது எப்போது அறிமுகமாக இருந்தது என்ற தகவல்களும் தற்போது கிடைத்துள்ளது.

இந்த இடத்தில் முதல் காராக டாடா பஞ்சு இவி கார் இருக்கிறது. இந்த கார் பேஸ்லிப்ட் மாடல் வரும் பிப்ரவரி 20ம் தேதி அறிமுகமாகிறது. இது என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் விரும்பிகளுக்கு ஏற்ற காராக இருக்கிறது. சமீபத்தில் தான் டாடா பஞ்ச் காரின் பெட்ரோல் வெர்ஷன் அப்டேட் ஆகப்பட்டு செய்யப்பட்ட நிலையில் அதன் இவி வெர்ஷன் கார் தற்போது அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது.
இதன் முன் பக்க கிரில் பகுதி வடிவமைப்பு மாற்றப்படுகிறது. இதுபோக எல்இடி டிஆர்எல் மற்றும் ஸ்பிளிட் எல்இடி ஹெட் லைட் செட்டப் அதேபோலவே வழங்கும் அமைக்கப்பட்டுள்ளது. பம்பர் பகுதியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அலாய் வீல் பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பின்பகுதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பஞ்ச் லிப்ட் காரில் உள்ள அதை போல எல்இடி லைட் பார் செட்டப்புடன் ஸ்பாய்லர் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டனா உடன் வருகிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன முக்கியமாக அடாஸ், 360 டிகிரி கேமரா, வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகள் ஆகிய வருகிறது. பேட்டரி பேக்கை பொறுத்தவரை நெக்ஸான் காரில் உள்ள 45 கிலோ வாட்ஹவர் இதில் பொருத்தப்படுகிறது. இந்த கார் 120 பிஎச்பி பவரையும் 190 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் மற்றொரு குறைந்த விலை காராக டியாகோ காரும் ஃபேஸ்லிப்ட் அப்டேட் இந்த 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அந்நிறுவனம் ஏற்கனவே தனது பணிகளை துவங்கி விட்டது. இந்த காரை அவ்வப்போது சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இதன் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்பை புகைப்படங்களில் காரின் முகப்பு பகுதியில் பின் பகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதுபோக புதிய கலர் ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இதுபோக பெரிய ப்லோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், டு ஸ்போக் ஸ்டேரிங் வீல் ஆகிய இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

டாடா சியாரா இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது. இந்த கார் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விற்பனையாகி வரும் நிலையில் இந்த 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி சியாரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் காரை அந்நிறுவனம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த காரின் வடிவமைப்பு பெட்ரோல் காரின் வடிவமைப்பை ஒத்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில சில மாற்றங்கள் இருக்கலாம் முக்கியமாக முன் பக்கம் முழுமையாக மூடப்பட்ட கிரில் பகுதி, ஏரோடைனமிக் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக்கலி ஸ்பெசிபிக் கலர் ஆப்ஷன்கள் ஆகிய அனைத்து இடம் பெற வாய்ப்புள்ளது.
உள்ளிட்ட பெட்ரோல் காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த கார்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் இந்த காரில் ஹாரியர் இவி காரில் உள்ள அதே பேட்டரி ஆப்ஷன்களில் இடம் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இதில் 65 கிலோ வாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் என ஆகிய இரண்டு விதமான பேட்டரிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இதில் பெரிய பேட்டரி பேக்கில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் இடம்பெரும் என எதிர்பார்க்கலாம். சிறிய பெட்டரி பேக்கில் வியர்வில் டிரைவ் ஆப்சன் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நிறுவனம் அவ்னியா என்ற காரின் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது முதலில் இந்த காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த கார் கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்பொழுது கான்செப்ட் காராக காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் முழு வடிவம் பெற்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையாகாமல் இதற்கான தனியாக ஒரு விற்பனை நெட்வொர்க்கை உருவாக்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதற்காக ஏற்பாடுகள் எல்லாம் தற்போது நடந்து வருகின்றன.
டாடா நிறுவனத்தை இந்த தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சிறப்பாக விற்பனையாகி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த கார்கள் எல்லாம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான கார்களாகவும் உள்ளன இந்நிலையில் இந்த புதிய கார்கள் டாடா நிறுவனத்தை தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் வைத்திருக்க உதவும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









