டைகூனில் இல்லாத ஆனால் குஷாக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் 5 அட்டகாசமான வசதிகள்

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டைகூன் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பல்வேறு மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்களுக்கும் போட்டியாக இந்தப் புதிய டைகூன் விற்பனை செய்யப்படவுள்ளது. டைகூனுக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக ஸ்கோடா குஷாக் இருக்கும்

டைகூன் எஸ்யூவியின் ஸ்கோடா வெர்ஷன் தான் குஷாக். டைகூனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாட்ஃபார்ம் மற்றும் இன்ஜின் தேர்வுகளே குஷாக்கிலும் இருக்கின்றன. ஆனால், புதிதாக மேம்படுத்தப்பட்ட டைகூன் எஸ்யூவியில் கூட இல்லாத சில அம்சங்களை ஸ்கோடா தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவியான குஷாக்கில் கொடுத்துள்ளது. அப்படி டைகூனின் அடிப்படை வேரியன்டில் இல்லாத ஆனால் குஷாக்கில் அடிப்படை வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஐந்து மேம்பட்ட அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

Skoda Kushaq

சன்ரூஃப்

குஷாக் எஸ்யூவியின் அடிப்படை வேரியன்டிலேயே சன்ரூஃப் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. டைகூனின் அடிப்படை வேரியன்டில் அந்த வசதி இல்லை. உயர்நிலை வேரியன்ட்களிலேயே உள்ளது. இந்தியாவில் பெரியளவில் பயன்பாடு இல்லையென்றாலும், சன்ரூஃப் வசதி கொண்ட கார்களை வாங்கவே வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான விலையில் சன்ரூஃப் வசதியைக் கொடுக்க முடியும் என்றே நிறுவனங்கள் திட்டமிட்டு கொடுத்து வருகின்றன.

ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள்

இரண்டு எஸ்யூவி மாடல்களிலும் LED முகப்பு விளக்குகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஸ்கோடா ஒருபடி மேலே சென்று குஷாக்கில் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் வசதியையும் அடிப்படை வேரியன்டில் இருந்தே ஸ்டாண்டர்டாகக் கொடுத்துள்ளது. டைகூனின் உயர்நிலை வேரியன்ட்களிலேயே இந்த வசதி இருக்கிறது. இந்த வசதி இருந்தால் வெளிப்புற வெளிச்சத்தின் அளவு குறையும் போது முகப்பு விளக்குகள் தானாகவே ஆன் ஆகி விடும். இது ஒரு வகையில் பாதுகாப்பு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

Volkswagen Taigun

அலாய் வீல்கள்

அலாய் வீல்களை அழகுக்கான அம்சமாக வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். தங்கள் கார்களுக்கு அலாய் வீல்கள் கூடுதல் அழகு சேர்ப்பதாக நினைக்கிறார்கள். டைகூனின் அடிப்படை வேரியன்டில் ஸ்டீல் வீல்களையே கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். ஆனால் குஷாக் மாடலின் அடிப்படை வேரியன்டில் தொடங்கி அனைத்து வேரியன்ட்களிலும் அலாய் வீல்களை ஸ்டாண்டர்டாகக் கொடுத்துள்ளது ஸ்கோடா.

ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்

மழை வரும் போது தானாகவே வைப்பர்கள் ஆன் செய்யும் சென்சார்கள் குஷாக் மாடலின் அடிப்படை வேரியன்டில் இருக்கிறது. ஆனால் ஃபோக்ஸ்வாகன் டைகூனின் அடிப்படை வேரியன்டில் அது இல்லை. மேலே இருக்கும் வசதிகளில் பார்த்ததைப் போலவே, உயர்நிலை வேரியன்ட்களிலேயே இந்த வசதியையும் ஸ்கோடா கொடுத்திருக்கிறது. மழைக் காலங்களில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்டோ-டிம்மிங் IRVM

IRVM என்பது உட்புற ரியர் வியூ மிரரைக் குறிக்கும் சுருக்கெழுத்தாகப் குறிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பின்னால் வரும் வாகனங்களின் விளக்கொளியை தானாகவே மங்கச் செய்து காட்டும் வகையிலான வசதியை ஆட்டோ டிம்மிங் IRVM வழங்குகிறது. இது ஸ்கோடா குஷாக்கின் அடிப்படை வேரியன்டில் உள்ளது. டைகூனில் ஆட்மேட்டிக்காக இல்லாமல் மேனுவலாக அதனை நாம் செய்யும் மேனுவல் IRVM வசதி உள்ளது.

விலை

இந்த மேம்பட்ட வசதிகளுடன் குஷாக் எஸ்யூவியின் அடிப்படை மாடலை ரூ.10.69 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா. ஃபோக்ஸ்வாகன் டைகூன் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலைகளை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் ரூ.10.50 லட்சம் முதல் ரூ.11 லட்சத்திற்குள்ளான தொடக்க விலையையே அது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடிப்படை வேரியன்டிலேயே மேம்பட்ட வசதிகளைக் கொடுப்பது வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்வதற்கு உதவும். ஸ்கோடா அதனை மிகச்சிறப்பாக செய்துள்ளது. சமீபத்தில் கடந்த மாதம் தான் இந்த குஷாக் எஸ்யூவி மாடலை ஸ்கோடா அப்டேட் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் வெற்றியாளர் ஸ்கோடா குஷாக் தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 11, 2026, 16:12 [IST]
English summary
5 features that are given in skoda kushaq base variant but not in volkswagen taigun base variant
மேலும்... #volkswagen #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+