35 கி.மீ மைலேஜ் தருது! இந்த 5 காரை வாங்க ஆளே இல்ல! என்னென்ன கார் தெரியுமா?
மாருதி நிறுவனம் இந்தியாவில் நம்பர் 1 வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருந்தாலும் இந்நிறுவனத்தில் விற்பனையாகும் கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகும் என பலர் நினைப்பார்கள். ஆனால் இந்நிறுவனத்தின் 5 கார்கள் விற்பனையில் குறைவாகவே உள்ளன.
மாருதி நிறுவனம் நெக்ஸா மற்றும் அரேனா ஆகிய 2 விதமான டீலர்ஷிப்கள் மூலமே வாகனங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் பட்ஜெட் கார்கள் எல்லாம் அரேனா கார்கள் மூலம் விற்பனையாகி வருகிறது. பிரிமியம் கார்கள் எல்லாம் நெக்ஸான பிராண்டின் வழியாக விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனம் மொத்தம் 17 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் 2000 கார்கள் கூட விற்பனையாகாத 5 மாடல் காரை பற்றி தான் காணப்போகிறோம்.

மாருதி எஸ் - பிரெஸ்ஸோ
மாருதி நிறுவனைத்தின் சிறிய கார்களில் ஒன்று எஸ்-பிரெஸ்ஸோ. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஎஸ் பவரையும், 89 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு ஏஎம்டி அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்க்ப்பட்டுள்ளது. சிஎன்ஜியில் இந்த கார் 56.69 பிஎஸ் பவர் மற்றும் 82.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மேனுவல் கியர் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. இந்த கார் பெட்ரோல் மேனுவலில் 24 கி.மீ மைலேஜூம், சிஎன்ஜியில் 32.73 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த கார் ரூ3.70 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 1954 கார்கள் விற்பனையாகியுள்ளது.
மாருதி இக்னீஷ்
மாருதி நிறுவனம் சுஸூகியின் டோட்டல் எஃபெக்டிவ் கண்ட்ரோல் டெக்னாலஜியில் இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 20.89 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் மொத்தம் 1902 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி செலிரியோ
மாருதி நிறுவனத்தின் செலிரியோ காரை பொருத்தவரை கே10 சி 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. இந்த இன்ஜின் 66 எச்பி பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் எல்எக்ஸ்ஐ வேரியன்டில் மட்டும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் கிடையாது. இந்த கார் 26.68 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இதுவே சிஎன்ஜி வேரியன்டில் 34.43 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் ரூ4.69 லட்சம் முதல் ரூ6.72 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தமே 1501 கார்கள் விற்பனையாகியுள்ளது.
மாருதி ஜிம்னி
மாருதி நிறுவனத்தின் ஜிம்னி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15 பி மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் உடன் வழங்கப்பட்டுள்ளது. இது 105 எச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இ்த காரில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், முன்பக்கமும், பின்பக்கமும் வைப்பர்கள் வாஷருடனவ் கிடைக்கிறது. டே நைட் ஐஆர்விஎம், டிரைவர் சைடு பவர் விண்டோ, சாய்வு தன்மை கொண்ட முன்பக்க பயணிகள் சீட், ஸ்டியரிங்கில் மியூசிக் கண்ட்ரோல் ஆப்ஷன், டிஎஃப்டி கலர் டிஸ்பிளே, சீட்களில் ஹெட்ரெஸ்ட்களை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன் உடன் வருகிறது. இந்த கார் 12.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. கடந்த ஜனவரி மொத்தம் 591 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி இன்விக்டோ
மாருதி இன்விக்டோ காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டிஎன்ஜிஏ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளுது. இது இன்டலிஜென்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இந்த கார் 183 எச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.5 நொடியில் பிக்கப் செய்துவிடும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 23.24 கி.மீ மைலேஜை தருகிறது. இந்த கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் மாருதி பேட்ஜ் வெர்ஷன் காராகும். இந்த கார் ரூ24.97 லட்சம் முதல் ரூ28.61 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது.இந்த கார் வெறும் 197 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது.


Click it and Unblock the Notifications









