2 வாரத்தில் வரப்போகும் 6 கார்கள்! ஒவ்வொன்னும் தரமா இருக்குதே!
இந்தியாவில் தற்போது புதிய வாகனங்களின் வருகை அணிவகுத்து நிற்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் ஆறு எஸ்யூவி காரர்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. இது பிரீமியம் எஸ்வி காரர்களாகவும் இருக்கிறது. சிறிய ரக எஸ்யூவிகளாகவும் இருக்கிறது. ரூபாய் 11 லட்சம் முதல் ரூ45 லட்சம் வரையிலான விலையில் இந்த கார்கள் அறிமுகமாக உள்ளன. இதில் இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வரும் ஜனவரி 19ஆம் தேதி டொயோட்டா நிறுவனம் தனது புதிய டொயோட்டோ அர்பன் க்ரூஸர் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது இது மாருதி நிறுவனத்தின் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட காராகும் இந்த கார் ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை முன் பக்கம் ஹேமார்கெட் ஷார்க் வடிவமைப்பை ஒத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய சர்வதேச டிசைன் மொழியை பின்பற்றி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் முன்வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக நிஸான் நிறுவனம் கிராவைட் என்ற காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் 4 மீட்டர் குறைவான எம் பிவியாக காராக்கும் சிஎம் எப் ஏ ப்ளஸ் என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள காராக இது இருக்கிறது. நிஸான் மேக்னட் காரும் இதே பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது. இந்த காரும் அடுத்த ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் காரின் ரீபேச் வெர்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான கிரில் பம்பர் மற்றும் வீல் ஆகிய வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது ஹெட்லைட் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இந்த காரில் டிரைபர் காரில் உள்ள அதை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வருகிறது.

ஜனவரி 26 ஆம் தேதி ரெனால்ட் நிறுவனம் தனது மிட் சைஸ் எஸ்யூவி காராக மூன்றாம் தலைமுறை டஸ்டர் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனையாகி வருகிறது. இதன் இந்திய மாடல் சில டிசைன் மாற்றங்களுடன் முக்கியமாக வித்தியாசமான drl செட்டப் உடன் பின்பக்கம் லைட் பேண்ட் மற்றும் பெரிய டெயில் கேட் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 1.0 லி 3 சிலிண்டர் இன்ஜின் மற்றும் 1.2லி 3 பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது டைரோன் என்ற மிட்-சைஸ்எஸ்யூவி காரை தனது டைகுன் காருக்கு மாற்றாக விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த கார் வரும் ஜனவரி 28ஆம் தேதி விற்பனைக்காக அறிமுகமாகிறது. இந்த கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் தற்போது அறிமுகமானாலும் இதில் டெலிவரிகள் சற்று தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல், முன்பக்க மசாஜ் சீட்டுகள், 15 இன்ச் ஸ்கிரீன் சிஸ்டம், 30 கலர்களில் ஆம்பியன்ஸ் லைட்டிங் சிஸ்டம் உள்ள ஆப்ஷன்கள் இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி நிறுவனம் தனது இ-விட்டாரா என்ற முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டில் இந்த ஜனவரி மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹுண்டாய் கிரெக்டா எலெக்ட்ரிக் காரின் போட்டி காராக விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன்களை இடம்பெருமை எதிர்பார்க்கலாம். இத கார் முழு சார்ஜில் 543 கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 10.1 in டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 10 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட்டுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இடம்பெரும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் காரை பேஸ்லிஃப்ட் செய்து இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்த காரில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உட்புற கட்டமைப்பு பல்வேறு புதிய அம்சங்கள் 360 டிகிரி கேமரா சிஸ்டம் உள்ளிட்ட அப்டேட்களுடன் வருகிறது. இஞ்சின் விஷயத்தில் எந்த விதமான மாற்றங்களும் செய்யாமல் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸயூவி கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதை போட்டி அதிகமாக வருகிறது. அடுத்த இரண்டு வாரத்திற்குள் ஆறு புதிய எஸ்வி கார்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளன இது நிச்சயம் இந்தியா மார்க்கெட்டை எந்த அளவுக்கு எஸ்யூவி கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை காட்டுகிறது. இதில் உங்களுக்கு பிடித்த கார் எது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








