1-2 இல்ல வரிசையா 6 கார் புதுசா வருது! இந்த பிப்ரவரி ரொம்ப நல்ல மாசமா இருக்குதே!
பிப்ரவரி மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்கள் குறித்த பட்டியல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இந்தியாவில் இந்த மாதம் மட்டும் ஐந்து எஸ்யூவி கார்களும் ஒரு எம்பிவி காரும் என மொத்தம் ஆறு கார்கள் அறிமுகமாக உள்ளன. என்னென்ன கார்கள் அறிமுகமாக உள்ளது? அதில் உள்ள அம்சங்கள் என்ன? அது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் கிராவேட்
நிறுவனம் தனது கிராவேட் என்ற காரை கடந்த ஜனவரி மாதமே அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்கள் காரணமாக இந்த காரின் அறிமுகம் தாமதமாகியுள்ளது. இது ஒரு காம்பேக்ட் ரக எம்பிவி காராகவும் இந்த கார் ரெனால்ட் டிரைபர் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிஸான் பிராண்ட் காராகும். இதில் மூன்று வரிசை கொண்ட சீட்அமைப்புகள் உள்ளன. இதில் பல்வேறு அம்சங்கள் உட்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

நிஸான் டெக்டான்
இந்த கார் சமீபத்தில் தான் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இது மஸ்குலரான வெளிப்புற கட்டமைப்பு மற்றும் சர்வதேச அளவில் நிசான் பிராண்டில் விற்பனையாகி வரும் பெட்ரோல் என்ற காரின் அடிப்படையான வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், லெவல் 2 அடாஸ் ஆகிய அம்சங்கள் இதில் உட்புகுத்தப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 எம் ஸ்போர்ட் ப்ரோ
பிஎம்டபிள்யூ தனது எக்ஸ்3 30 எம் ஸ்போர்ட் காரின் முன்பதிவை துவங்கிவிட்டது. இந்த கார் வரும் பிப்ரவரி 16ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 48 ஓல்ட் மையல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 258 எச்பி பவரையும் 400எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் கிரே நிற வடிவமைப்பு கார் இருக்கிறது. இது ரெகுலர் மாடலில் இருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால் பலர் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மாருதி இ-விட்டாரா
மாருதி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான இ- விட்டாரா சுமார் ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காட்சிபடுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த கார் விற்பனைக்கு வரும் என்ற நீண்ட எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த கார் 49 கிலோவாட் ஹவர் மற்றும் 61 கிலோ வாட் ஹவர் இரண்டு விதமான பேட்டரி பேக்குகளில் வருகிறது. சிங்கள் சார்ஜில் 543 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் கடந்த டிசம்பர் மாதம் பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அப்பொழுது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஃபோக்ஸ்வேகன் டைரோன்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைரோன் என்ற காரை சமீபத்தில் வெளியிட்டது. கார் முழுவதுமாக இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதற்கான அசெம்பிளி பணிகளும் தற்போது துவங்கியுள்ளன. இது அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஃபார்ச்சூனர், கோடியாக், குளோஸ்டர், மெரிடியன் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் 45 முதல் 50 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி மெஜஸ்டர்
எம்ஜி நிறுவனம் தனது மெஜஸ்டர் காரை வரும் 12ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு ஆண்டுக்கு பிறகு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் எம் ஜி குளோஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக விற்பனைக்கு வருகிறது. எம்ஜி குளோஸ்டர் காரில் உள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உள்ளன பெரிய எஸ்யூவி என்ற பெயருக்கு ஏற்ற காராக இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிப்ரவரி மாதம் வரிசையாக கார்கள் அறிமுகமாக உள்ளதால் வாகன விரும்பிகள் பல கொஸ்டின் இருக்கிறார்கள் அவர்கள் விரும்பிய கார்கள் இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது இந்த மாதம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வாகன விற்பனையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Click it and Unblock the Notifications








