7பேர் ஒரே குடும்பமா போகலாம்! இவ்வளவு பெரிய கார் இவ்வளவு கம்மி ரேட்ல கூட வருதா?

இந்தியாவில் எம்பிவி கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில் புதிதாக கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பலர் எம்பிவி கார்களை தான் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு நல்ல வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் கார்களை அதிகம் விரும்பத் துவங்கி விட்டனர். அதன்படி இந்தியாவில் விரைவில் வரவுள்ள எம்பிவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி மாருதி, ஹூண்டாய், நிஸான், பென்ஸ் மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்களையும் கார்கள் இந்த பட்டியலில் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் கிராவிட்

இந்த பட்டியலில் முதல் காராக நிஸான் நிறுவனத்தின் கிராவிட் கார் இருக்கிறது. இந்த கார் வரும் 17ம் தேதி விற்பனைக்கு அறிமுகமாகிறது. இந்த கார் மூன்று வரிசை சீட்டர் கொண்ட ஒரு எம்பிவி ரக காராகும். இந்த கார் சிஎம்எப் ஏ பிளாட்பார்மல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. அந்த கார் பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்பை அதிக கவனத்தில் கொண்டுள்ளதால் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டெலிவரிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

Upcoming MPVs india

மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது வீ கிளாஸ் எம்பிவி காரை மீண்டும் கொண்டு வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் 3ம் தேதி இந்த கார் இந்தியாவிற்கு வருகிறது3 இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மார்க்கெட்டில் டொயோட்டா வில்ஃபயர் மற்றும் லெக்ஸஸ் எல்எம் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக விற்பனையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வேலையை பொறுத்தவரை ரூபாய் 1.15 கோடி வரை விற்பனையாக வாய்ப்புள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மாருதி காம்பேக்ட் எம்பிவி

மாருதி நிறுவனம் காம்பேக்ட் எம்பிவி செக்மெண்ட்டில் புதிய காரை கலம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கார் எர்டிகா கார் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எம் பி வி காராக இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. 2027ம் ஆண்டு இந்த கார் அறிமுகமாக ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஸ்பேசியா என்ற காரை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் இந்த கார் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இதில் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிக மைலேஜ் தரும் காராக இந்த கார் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Upcoming MPVs india

ஹூண்டாய் எம்பிவி

ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய எம்பிவி காரை இந்தியாவில் களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது. இந்த கார் சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் ஸ்டார்கேசர் என்ற அந்நிறுவனத்தின் தயாரிப்பின் வடிவமைப்பை ஒத்து இந்தியாவில் வடிவமைக்கப்படும் எனது எதிர்பார்க்கலாம். இந்த காருக்கான பெயரை நிறுவனம் இதுவரை முடிவு செய்யவில்லை. இந்த கார் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு செக்மெண்டில் ஒரே காரை வடிவமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.

மாருதி ஒய்எம்சி

மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் பிரிவில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த காருக்கு தற்போது ஒய்எம்சி என கோடு பெயரை வைத்துள்ளது . இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிட்டாராகாரை விட அதிக விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பேட்டரி பேக் மோட்டார் எல்லாம் அடிப்படையிலேயே உருவாக்கப்படும் வெளிப்புற பாடி அமைப்பு மட்டும் எம்பிவி கார் தோற்றத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.

சிட்ரோன் ஸ்பேஸ்டூலர்

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் எம்பிவி காராக என்ற காரை களம் இறக்கத் திட்டமிட்டு வருகிறது. இந்த கார் ரெகுலர் எம்பிவி மற்றும் லாங் வீல் பேஸ் ஆகிய இரண்டு விதமான ஃபார்மேட்டுகளில் களமிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த காரில் 75 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 348 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்பிவி ரக கார்களின் வருகை இந்தியா குடும்பங்களுக்கு ஏற்றதாக இருப்பதால் இந்த செக்மென்ட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகம் வளர்ந்து வருவதால் இந்த கார் வகை அதிகம் விரும்புகிறார்கள். இந்த ஆறு கார்களும் நிச்சயம் மார்க்கெட்டிங் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 8, 2026, 17:00 [IST]
English summary
6 upcoming mpvs in india you should know
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+