இப்பதான் ஷோரூம்ல இருந்து டெலிவரி எடுத்த மாதிரி இருக்கு! 1967-ல் வாங்கிய அம்பாஸிடரை புதியது போல் மாற்றிய ஓனர்!
இந்திய சாலைகளை ஒரு காலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த கார் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador). கடந்த 2014ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. இருப்பினும் தற்போதும் ஒரு சிலர் தங்கள் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை புதியது போல் பராமரித்து வருகின்றனர்.
இதில், ராதாகிருஷ்ணனும் ஒருவர். இவரிடம் 1967ம் ஆண்டு மாடல் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 60 வயதான இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை, கடந்த காலங்களில், ராதாகிருஷ்ணன் பலமுறை மாடிஃபிகேஷன் செய்துள்ளார். இந்த வரிசையில் தற்போதும் அவரது கார் மீண்டும் ஒரு முறை மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை அவரது காரில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உண்மையான இன்ஜின் மாற்றப்பட்டு, ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia) காரின் 1.9 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் மெர்சிடிஸ்-பென்ஸ் டபிள்யூ203 (Mercedes-Benz W203) காரின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸும் தற்போது இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த வரிசையில் டாடா சுமோ (Tata Sumo) காரின் டிஃப்ரன்ஸியலும், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடிஃபிகேஷன்களுக்கு பிறகு, ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் முழுமையாக மாறி விட்டதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் தற்போது அடிக்கடி நெடுஞ்சாலைகளில் இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் பயணம் செய்து கொண்டுள்ளார்.

அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கூட அவர் பயணம் செய்துள்ளாராம். இயந்திர பாகங்கள் மட்டுமல்லாது, ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் இன்னும் பல்வேறு பாகங்களையும் ராதாகிருஷ்ணன் மாற்றியுள்ளார். இதன்படி கியா செல்டோஸ் (Kia Seltos) காரின் 16 இன்ச் அலாய் வீல்களை இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் பெற்றுள்ளது.
தூரத்தில் இருந்து பார்த்தால் இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் நிறம் சாதாரண கருப்பு போல தோன்றும். ஆனால் இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் பிளாக் மெட்டாலிக் நிறம் ஆகும். இந்த நிறம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது.
இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உட்புறத்தை பொறுத்தவரையில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டியரிங் வீல் ஆகியவை எல்லாம் இடம்பெற்றுள்ளன. அத்துடன் 360 டிகிரி கேமரா வசதியும் இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற மாற்றங்கள் மட்டுமல்லாது, டாடா லாரியின் ஹெவி ட்யூட்டி ஏர் ஃபில்டரும் இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் ரேடியேட்டரும் கூட அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மாற்றங்கள் மூலம் இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார், ஷோரூமில் இருந்து தற்போதுதான் டெலிவரி எடுக்கப்பட்டது போல் புத்தம் புதியதாக மாறியுள்ளது. Dajish P என்ற யூடியூப் சேனலில், இந்த மாடிஃபிகேஷன்களை விளக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடந்த காலங்களில் ஏராளமான ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார்கள் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் சற்று வித்தியாசமானது. ஏனெனில் இது பல்வேறு கார்களின் கலவையாக காட்சியளிக்கிறது. எனவே இது நிச்சயம் வித்தியாசமான ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications