7, 8 பேர் உள்ளே அமர்ந்தாலும் இன்னும் இடம் இருக்கும்... பிரபு தேவா வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்ட கார்!

நடிகரும், இந்தியாவின் மைக்கெல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவருமான பிரபு தேவா புதியதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். கார் அவரது வீட்டு வாசலுக்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.75.90 லட்சமாக விலை கொண்ட காராக பிரபு தேவா வாங்கியிருக்கும் இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரம்மாண்டமான தோற்றத்தில், ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்களுக்கு இந்தியாவில் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி வருகிறது. குறிப்பாக, சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக இவ்வாறான சொகுசு கார்களை வாங்குகின்றனர். நடிகர் பிரபு தேவா வாங்கியிருப்பதும் அவ்வாறான ஒரு காரே ஆகும். பிரபு தேவாவிற்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன்.

actor prabhu deva takes home delivery of mg m9 presidential limousine

ஏனெனில் அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் அறியப்படும் நபர்களுள் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் இருந்து சென்று பாலிவுட்டை கலக்கியவர், தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த அளவிற்கு பிரபலமான சினிமா நட்சத்திரமான பிரபு தேவா புதியதாக வாங்கியிருக்கும் காரின் பெயர் எம்ஜி எம்9 பிரெஷிடென்ஷியல் லிமௌசைன் ஆகும்.

லிமௌசைன் என பெயர் கொண்டாலே அது லக்சரியான, உட்புறத்தில் அதிக இடவசதியை கொண்ட கார் என்று அர்த்தம். அப்படியென்றால், நடிகர் பிரபு தேவா புதியதாக எத்தகைய சொகுசு காரை வாங்கியுள்ளார் என்று யோசித்து பாருங்கள். எம்9 பிரெஷிடென்ஷியல் லிமௌசைன் காரை பிரபு தேவா வாங்கியிருப்பதை JSW MG மோட்டார் நிறுவனம் மகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

actor prabhu deva takes home delivery of mg m9 presidential limousine

இவ்வாறான விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதற்காக என்றே 'எம்ஜி செலெக்ட்' என்கிற ஷோரூம்களை JSW MG நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. எம்ஜி செலெக்ட் ஷோரூம் வாயிலாக கார் நடிகர் பிரபு தேவாவின் வீட்டிற்கே கொண்டு சென்று டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. பிரபு தேவா உடன் அப்போது எடுக்கப்பட்ட படத்தையும் JSW MG மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் பிரபு தேவா இந்த லக்சரி MG காரை கிரே நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த கிரே நிறத்தை 'கான்க்ரீட் கிரே' என MG நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், மெட்டல் கருப்பு மற்றும் பேர்ல் லஸ்டர் வெள்ளை கலர் ஆப்ஷன்களிலும் MG M9 கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மெட்டல் கருப்பு ஆனது சிங்கிள்-டோன் கலர் ஆப்ஷன் ஆகும்.

நடிகர் பிரபு தேவா தேர்வு செய்த கான்க்ரீட் கிரே மற்றும் பேர்ல் லஸ்டர் வெள்ளை ஆகிய இரண்டும் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். இந்த இரு நிறங்களில் வாங்கினால், காரின் மேற்கூரை கருப்பு நிறத்தில் கிடைக்கும். தற்போது நடிகர் பிரபு தேவா வாங்கியிருக்கும் M9 காரிலும் மற்ற உடல் பாகங்கள் கிரே நிறத்தில் இருந்தாலும், மேற்கூரை கருப்பு நிறத்தில் இருக்கும்.

முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில் என்ஜினுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. அந்த எலெக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைக்க 90 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 548கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது MG நிறுவனம். இந்த எலெக்ட்ரிக் காரின் நீளம் சுமார் 5.2 மீட்டர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.70.90 லட்சத்தில் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட MG M9 பிரெஷிடென்ஷியல் லிமௌசைன் காரின் விலை பின்னர் ரூ.5 லட்சம் அதிகரிக்கப்பட்டு, தற்சமயம் ரூ.75.90 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி, ஷோரூம் ஹேண்ட்லிங் கட்டணம் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், ஆன்-ரோடு விலை இன்னும் ரூ.5 லட்சம் கூடுதலாக வரும்.

Article Published On: Saturday, June 20, 2026, 6:14 [IST]
English summary
Actor prabhu deva takes home delivery of mg m9 presidential limousine car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out