1,000 கிமீ ரேஞ்ச், 15 நிமிடங்களில் சார்ஜ்... வருகிறது பெங்களூர் நிறுவனத்தின் புதிய மின்சார கார்!

பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்களை வாங்கும் ஆர்வம் இந்திய வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், நீண்ட தூர பயணங்களின்போது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் பேட்டரி பயண தூரம் ஆகியவை இன்னும் முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு நடைமுறையில் சிக்கல்களையும், கால விரயத்தையும் தரும் விஷயங்களாக உள்ளன.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஏடெர்னா என்ற நிறுவனம் 1,000 கிமீ ரேஞ்ச் தரும் புதிய மின்சார காரை உருவாக்கி வருகிறது. செயல்திறன், ரேஞ்ச், சார்ஜிங் நேரம் என அனைத்திலும் இது அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

Gen Alpha EV

பவர்ஃபுல் எலெக்ட்ரிக் கார்

ஏடெர்னா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜென் ஆல்ஃபா (Gen Alpha) என்ற பெயரிலான இந்த புதிய மின்சார காரில் 130kWh முதல் 150kWh மின்கலத் தொகுப்பு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்சக்கர இயக்க அமைப்புடன் உருவாக்கப்படும் இந்த காரில் சுமார் 295 எச்பி முதல் 335 எச்பி வரை அதிகபட்ச சக்தி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

மேலும், காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 190 கிமீ என்ற அளவில் இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை சுமார் 6 வினாடிகளில் எட்டும் வகையில் Gen Alpha உருவாக்கப்படுவதாக ஏடெர்னா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Gen Alpha EV

ஃபாஸ்ட் சார்ஜிங்

ஜென் ஆல்ஃபா கார் திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் சார்ஜிங் வேகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை 0- 80 சதவீதம் என்ற அளவில் சார்ஜ் செய்வதற்கு வெறும் 15 நிமிடங்கள் போதுமானதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீண்ட தூர பயணங்களின்போது மின்சார காரை சார்ஜ் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.

Also Read

திடநிலை மின்கடத்தி தொழில்நுட்பம்

தற்போது பெரும்பாலான மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளில் திரவ மின்கடத்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், திடநிலை பேட்டரிகளில் இதற்கு பதிலாக திடப்பொருளால் ஆன மின்கடத்தி பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அதிக ஆற்றல் அடர்த்தி, வேகமான சார்ஜிங் மற்றும் நீண்ட மின்கல ஆயுள் போன்ற பலன்களை வழங்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில், அதிக உற்பத்திச் செலவு மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்வதில் உள்ள சவால்கள் காரணமாக திடநிலை மின்கல தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை பல நிறுவனங்களுக்கு உள்ளது. இருப்பினும், ஏடெர்னா மோட்டார்ஸ் இந்த புதிய திடமின்கடத்தி தொழில்நுட்பத்துடன் பேட்டரியை பயன்படுத்த உள்ளது.

Gen Alpha EV

சொகுசு கார்

ஜென் ஆல்ஃபா மின்சார கார் 4.7 மீட்டர் நீளமும், 1.9 மீட்டர் அகலமும், 1.6 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்களுக்கு இடையிலான வீல்பேஸ் நீளம் 2.9 மீட்டராக இருக்கும். காரின் காற்றியக்கவியல் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காற்று எதிர்ப்புக் குறியீடு சுமார் 0.23 முதல் 0.25 என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மென்மையான அடிப்பகுதி மற்றும் காற்றியக்கவியல் வடிவமைப்புடன் கூடிய பின்புற இறக்கை உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெறும்.

சார்ஜிங் சுழற்றி அளவு

ஏடெர்னா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஜென் ஆல்ஃபா பக்கத்தில், திடநிலை மின்கலம் மூலம் 10,000க்கும் அதிகமான சார்ஜிங் சுழற்சிகளை வழங்கும் இலக்கு கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மின்கலத்தை காரின் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் வகையிலான வடிவமைப்பை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள்

தற்போதைய தலைமுறை கார்களில் பிரபலமாகி வரும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கும் ஜென் ஆல்ஃபா காரில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் இரண்டாம் நிலை மேம்பட்ட ஓட்டுனர் உதவி அமைப்பு (Level 2 ADAS) உள்ளிட்ட நவீன பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் உதவி தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம் எப்போது?

தற்போது ஜென் ஆல்ஃபா மின்சார காரின் மேம்பாட்டுப் பணிகளில் ஏடெர்னா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய மின்சார காரை 2029ம் ஆண்டில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் நிச்சயமாக இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, October 2, 2026, 11:46 [IST]
English summary
Aeterna motors gen alpha ev 1000 km range india launch timeline
மேலும்... #bangalore #electric car #automobiles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X