ஒவ்வொரு காரும் லிட்டருக்கு மைலேஜை வாரி வழங்குது! சிட்டிக்குள் பயன்படுத்த வேற எதையும் தேட வேண்டாம்!
நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டுவதற்கு தனி திறன் வேண்டும். வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox) கொண்ட கார்களில் இருந்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கார்களுக்கு சமீப காலங்களில் பலர் மாறி வருவதற்கு இதுதான் காரணம் ஆகும். இருப்பினும், சற்று ஆராய்ந்து முடிவெடுத்தால் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை குறைந்த விலையில் வாங்க முடியும். அவ்வாறு இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): மார்க்கெட்டில் எந்த அளவிற்கு பிரபலமானதாக உள்ளதோ அந்த அளவிற்கு இந்த காரை பயன்படுத்துவதும் எளியது ஆகும். அந்த அளவிற்கு சிறிய அளவிலான நீளம், அகலம் மற்றும் உயரத்துடன் ஆல்டோ கே10 உருவாக்கப்படுகிறது. இந்த காரில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS) என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso): இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார் இதுவாகும். ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட்டாலும், மைக்ரோ-எஸ்யூவி போன்றதான உடலமைப்பை எஸ்-பிரெஸ்ஸோ கொண்டுள்ளது. இந்த மாருதி சுஸுகி காரிலும் ஏஜிஎஸ் வழங்கப்படுகிறது. ஏஜிஎஸ் உடன் ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.5.5 லட்சத்தில் இருந்து துவங்கும் நிலையில், எஸ்-பிரெஸ்ஸோ ஏஜிஎஸ் காரின் விலைகள் ரூ.4.75 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS): குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார்களிலேயே மிகவும் மென்மையான பயண அனுபவத்தை வழங்கும் கார் இதுவாகும். இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக ஏஎம்டி (AMT) வழங்கப்படுகிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் ஏஎம்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.12 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): மேலே கூறப்பட்ட மாருதி சுஸுகி கார்களை போன்று ஏஜிஎஸ் உடன் வேகன்ஆர் விற்பனை செய்யப்படுகிறது. மேற்கூறப்பட்ட மாருதி ஹேட்ச்பேக் கார்களை போன்று இல்லாமல், நிமிர்ந்த உயரமான ஹேட்ச்பேக் காராக வேகன்ஆர் விளங்குவதால் இந்த காரின் உட்புறத்தில் அதிக இடவசதியை பெற முடிகிறது. வேகன்ஆர் ஏஜிஎஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.96 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
டாடா பன்ச் (Tata Punch): இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றான பன்ச், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது எஸ்யூவி ரக கார் ஆகும். பாதுகாப்பில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற பன்ச் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்கள் ரூ.7.55 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன.
மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் செடான் ரக கார்களுக்கு வரவேற்பு குறைந்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், பல மாதங்களில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக பன்ச் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த காரிலும் ஏஜிஎஸ் ஆப்ஷனை மாருதி சுஸுகி வழங்கும் நிலையில், டிசைர் ஏஜிஎஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.62 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
நிசான் மேக்னைட் (Nissan Magnite): பன்ச் காரை காட்டிலும் அளவில் பெரியதான எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு மேக்னைட் ஏற்றதாக இருக்கும். இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டில் இ.இசட்-ஷிஃப்ட் (EZ-Shift) என்கிற புதுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை நிசான் வழங்குகிறது. இந்த கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மேக்னைட்டின் விலைகள் ரூ.6.49 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் எத்தனை காலம் ஆனாலும் சிலருக்கு மேனுவல் கார்களை ஓட்டவே பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், ஆட்டோமேட்டிக் கார்களுக்கு மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகரத்திற்குள் வசிப்போர் அதிகம் தேர்வு செய்யக்கூடியதாக ஆட்டோமேட்டிக் கார்கள் மாறிவரும் சூழலில், இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் கார்களில் ஒன்றை குறைந்த விலையில் வாங்கலாம். இதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்வது சிரமம் தான், ஏனெனில் எல்லாமே சிறந்தவை ஆயிற்றே...


Click it and Unblock the Notifications








