வாடகைக்கு எடுக்குறதா இருந்தால்கூட இந்த ஐந்தில் ஒரு காரை எடுக்க பாருங்க! ரோடே இல்லாத ஏரியாவாக இருந்தாலும் பரவால

மலைப்பகுதிகளில் கார் ஓட்டுவது பயமாக இருந்தாலும், ஒருவித அட்வென்ச்சராக இருக்கும். இதனாலேயே பலரும் தங்களது காரில் அவ்வப்போது மலைப்பகுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், அங்கேயே வசிக்கும் அந்த பகுதி மக்களுக்கு தான் அதில் உள்ள சிரமம் புரியும். இதனால்தான் மலைப்பகுதியில் வசிப்பவர்கள் கார் ஓட்டுவதில் வல்லவர்களாக உள்ளனர். கார் ஓட்டுவதில் மட்டும் திறமையை கொண்டிருந்தால் போதாது; அதற்கேற்ப பயன்படுத்தும் காரும் திறன்மிக்கதாக இருக்க வேண்டும்.

பாறைகள் நிறைந்த பகுதியில் செல்லும்போதும் அடிப்பகுதி அடிப்படாதவாறு காரின் கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) அதிகமாக இருக்க வேண்டும். அத்துடன், அதிக டார்க் திறனை வெளிப்படுத்தும் என்ஜின் உடன், அளவில் காம்பாக்ட்டாக கார் இருக்க வேண்டும். அவ்வாறான மலைப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றதான சில கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

affordable cars for residents of the hilly region

டாடா பன்ச் (Tata Punch): மலைப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கார். 187மிமீ கிரவுண்ட் கிளியரென்ஸ் கொண்டுள்ளது; அதாவது தரைக்கும், காரின் அடிப்பகுதிக்கும் இடையேயான தூரம் 187மிமீ ஆகும். இந்த காரின் வலிமையான உடலமைப்பிற்கு, இது பெற்றிருக்கும் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் தான் சாட்சியாகும். பன்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.5.60 லட்சத்தில் இருந்து ரூ.10.55 லட்சம் வரையில் உள்ளன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா பன்ச் காரை போலவே வலிமையான உடலமைப்பிற்கு பெயர் பெற்ற நெக்ஸானும் செங்குத்தான சாலைகளில் ஏறுவதற்கு ஏற்ற கார் ஆகும். அளவில் பெரிய எஸ்யூவி ரக கார் என்பதால், அதற்கேற்ப கிரவுண்ட் கிளியரென்ஸும் 209மிமீ ஆக நன்கு அதிகமாக உள்ளது. நெக்ஸானின் விலைகள் தற்சமயம் ரூ.5.60 லட்சத்தில் இருந்து ரூ.10.55 லட்சம் வரையில் உள்ளன.

affordable cars for residents of the hilly region

மஹிந்திரா தார் (Mahindra Thar): இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்படும் தாரில் 4x4 டிரைவ் சிஸ்டம், லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் 226மிமீ-இல் அதிகமான கிரவுண்ட் கிளியரென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஆனால் அதற்கேற்ப இந்த மஹிந்திரா ஆஃப்-ரோடு வாகனத்தின் விலைகளும் சற்று அதிகமாக ரூ.9.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny): தார் வாகனத்தை காட்டிலும் குறைவான எடையிலான ஆஃப்-ரோடு வாகனத்தை விரும்புபவர்களுக்கு ஜிம்னி ஏற்றது. மேலும், சுஸுகியின் ஜப்பானிய ஆல்க்ரிப் புரோ 4X4 டிரைவ் சிஸ்டத்தை ஜிம்னி கொண்டுள்ளது. இருப்பினும், தார் அளவிற்கு இதனை அதிக பேர் வாங்குவது இல்லை என்பது ஒவ்வொரு மாதமும் ஜிம்னியின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. ஜிம்னியின் விலைகள் தற்சமயம் ரூ.12.31 லட்சத்தில் இருந்து ரூ.14.45 லட்சம் வரையில் உள்ளன.

மஹிந்திரா பொலேரோ நியோ (Mahindra Bolero Neo): மார்க்கெட்டில் பிரபலமான பொலேரோவையும், இதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டும். இரண்டிற்கும் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் உள்ளன. முக்கியமாக, லேடார்-ஆன்-ஃபிரேம் சேசிஸில் பொலேரோ உருவாக்கப்படும் நிலையில், இது பாடி-ஆன்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்படுகிறது. இருப்பினும், பல விதமான பாதைகளுக்கு ஏற்ற டெக்னாலஜி மற்றும் பின்பக்க மெக்கானிக்கல் லாக்கிங் டிஃப்ரென்ஷியல் ஆகியவற்றால் மலைப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக விளங்கும் பொலேரோ நியோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.98 லட்சத்தில் இருந்து ரூ.12.48 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஓட்டுவதில் அதிக திறமை இருந்தாலும், அதற்கேற்ப காரிலும் சில திறன்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற கார்களான இவற்றில் எங்களது சாய்ஸ், மஹிந்திரா தார் ஆகும். ஏனெனில், இதனை கரடுமுரடான பாதைகளுக்கும், அதேநேரம் சாதாரணமான சாலைகளுக்கும் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆதலால், கார் இல்லாதவர்களும் வாடகைக்கு கார் எடுத்து மலைப்பகுதிகளுக்கு செல்கிறீர்கள் என்றால், இவற்றுள் ஒரு காரை தேர்வு செய்வது சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2026, 6:13 [IST]
English summary
Affordable cars for residents of the hilly region in india tata punch to mahindra bolero
மேலும்... #hill assist #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+