கடைசியா எப்போ சார்ஜ் போட்டோம் என்றதையே மறந்துடுவோம்! ஃபுல் சார்ஜில் 400கிமீ இயங்கக்கூடிய 7 எலெக்ட்ரிக் கார்கள்

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் முதன்மையான கவனம் அந்த எலெக்ட்ரிக் கார் எவ்வளவு ரேஞ்ச் (Range) வழங்கும் என்பதில்தான் இருக்கும். அதாவது, காரின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக எவ்வளவு தொலைவிற்கு கார் இயங்கும் என்பது ஆகும். பெட்ரோல்/டீசல் கார்களை போல் இல்லாமல், எலெக்ட்ரிக் கார்களை எவ்வளவு அதிகமாக வாங்குகிறோமோ அதற்கு ஏற்ப அவற்றின் ரேஞ்ச் அதிகமாக கிடைக்கிறது.

உதாரணத்திற்கு, சற்று அதிகமாக ரூ.30 லட்சத்தில் வாங்கப்படும் எலெக்ட்ரிக் கார்களில் அதிகப்பட்சமாக 400கிமீ வரையிலான ரேஞ்சை பெற முடிகிறது. அவ்வாறு, ரூ.30 லட்சத்திற்குள் அதிகப்படியான ரேஞ்சை வழங்கும் சில எலெக்ட்ரிக் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

affordable electric cars with 400km range

டாடா நெக்ஸான்.இவி லாங் ரேஞ்ச் (Tata Nexon.ev Long Range): நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் லாங் ரேஞ்ச் வேரியண்ட்கள் 45kWh பேட்டரி உடன் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பேட்டரியின் மூலமாக அதிகப்பட்சமாக 489கிமீ வரையிலான ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் காரில் பெறலாம். இந்த காரின் விலை ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.19.30 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric): இந்தியாவில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுள் ஒன்று இதுவாகும். ஏனெனில், ரூ.18.02 லட்சத்தில் இருந்து இதன் விலை துவங்குகிறது. கிரெட்டா எலெக்ட்ரிக் ஆனது 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 42kWh பேட்டரியில் அதிகப்பட்சமாக 420கிமீ மைலேஜையும், 51.4kWh பேட்டரியில் 510கிமீ மைலேஜையும் பெறலாம் என்கிறது ஹூண்டாய் நிறுவனம்.

affordable electric cars with 400km range

எம்ஜி இசட்.எஸ் இவி (MG ZS EV): ரூ.18.98 லட்சத்தில் இருந்து ரூ.25.44 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் இந்த எம்ஜி எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 461கிமீ வரையிலான ரேஞ்ச் கிடைக்கிறது. இதற்காக இந்த எலெக்ட்ரிக் காரில் 50.3kWh பேட்டரி வழங்கப்படுகிறது.

டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV): டாடா மோட்டார்ஸில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் இதுவாகும். ஹாரியர் இவி ஆனது 65kWh மற்றும் 75kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 538கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும் 65kWh பேட்டரியை ரூ.21.49 லட்சத்தில் இருந்து வாங்கலாம். அதேநேரம், 75kWh பேட்டரி ஆனது 622கிமீ மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். மேலே கூறப்பட்ட ஹாரியர் இவி எலெக்ட்ரிக் காருக்கு இணையாக ரூ.21.90 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ளது. அதேபோல், 59kWh மற்றும் 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் எக்ஸ்இவி 9இ விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9s): மஹிந்திரா நிறுவனத்தின் மேற்கூறப்பட்ட எக்ஸ்இவி 9இ காரின் விலை குறைவான வெர்சனாக எக்ஸ்இவி 9எஸ் விற்பனை செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த காரின் விலை ஆனது ரூ.19.95 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. எக்ஸ்இவி 9இ காரின் அதே 59kWh மற்றும் 79kWh பேட்டரி ஆப்ஷன்களுடன், 70kWh என்கிற பேட்டரி ஆப்ஷனிலும் எக்ஸ்இவி 9எஸ் விற்பனை செய்யப்படுகிறது.

பி.ஒய்.டி அட்டோ 3 (BYD Atto 3): சீனாவை சேர்ந்த பிரபலமான எலெக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் 49.92kWh மற்றும் 60.48kWh என இரு பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ரூ.24.99 லட்சத்தில் இருந்து கிடைக்கும் 49.92kWh பேட்டரி மூலமாக 521கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.30 லட்சத்தில் கார் வாங்கும் அளவிற்கு இந்தியாவில் பலரது தனிமனித பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆதலால், இன்றைய காலத்தில் ரூ.30 லட்சத்தில் கார் வாங்குவது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படியிருக்கையில், ரூ.30 லட்சத்திற்குள் எலெக்ட்ரிக் காரை வாங்க நினைப்பவர்கள் இந்த தொகுப்பில் கூறப்பட்ட எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றை அதிக ரேஞ்ச் உடன் சொந்தமாக்கலாம்.

Article Published On: Wednesday, May 6, 2026, 9:55 [IST]
English summary
Affordable electric cars with 400km range in india tata nexon ev to byd atto 3
மேலும்... #electric car #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+