விஜய் முதல்வர் ஆன பிறகாவது இதில் ஒரு காரை மிடில்-கிளாஸ் மக்களால் வாங்க முடியுமா? தமிழ்நாட்டின் நிலைமை மாறுமா?
அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் சாதாரணமாக பார்க்கும் பல கார்கள் நம் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களாக விளங்குகின்றன. இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியர்களின் தனிமனித பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது, அதேநேரம் சொகுசு கார் நிறுவனங்களும் இந்திய மக்களுக்கு ஏற்ப குறைந்த விலையிலான லக்சரி கார்களை வழங்குகின்றன. அவ்வாறு, கொஞ்சம் அதிக செலவு செய்தால் வாங்கிவிடக்கூடிய சொகுசு கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.ஏ (Mercedes-Benz GLA): ரூ.50 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட இந்தியாவில் விலை குறைவான பென்ஸ் கார் இதுவாகும். இதனால், இது தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இல்லாமல், தினசரி நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே இந்த காரை வாங்க முடியும்.

பி.எம்.டபிள்யூ எக்ஸ்3 (BMW X3): ஓட்டுவதற்கு மிகவும் சவுகரியமான குறைந்த விலை சொகுசு காராக எக்ஸ்3 கருதப்படுகிறது. இந்த காரினுள் டாஷ்போர்டில் வளைவான கர்வ்டு டிஸ்பிளே செட்-அப் வழங்கப்படுகிறது. மேலும், எக்ஸ்3 எஸ்யூவி காரில் 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் எக்ஸ்டிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC): மேலே கண்ட ஜிஎல்ஏ காரை காட்டிலும் லக்சரி தரத்திலான காரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஜிஎல்சி ஏற்றதாக இருக்கும். நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் மென்மையான இயக்கத்திற்கு மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் சிஸ்டத்துடன் இந்த பென்ஸ் கார் வழங்கப்படுகிறது. இருப்பினும், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.77 லட்சத்தில் இருந்து துவங்குவது கவனிக்கத்தக்கது.

வால்வோ எக்ஸ்.சி60 (Volvo XC60): மிகவும் சொகுசான கார் என்பது மட்டுமின்றி, மிகவும் பாதுகாப்பான வால்வோ காராகவும் எக்ஸ்சி60 விளங்குகிறது. இது ஒரு ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, இதில் 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இருப்பினும், இது ஸ்ட்ராங் ஹைப்ரீட் கார் கிடையாது; மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும்.
ஆடி க்யூ5 (Audi Q5): விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காருக்கு போட்டியாக இருக்கும் இந்த ஆடி எஸ்யூவி கார், சவுகரியமான பயணம் மற்றும் செயல்திறனை வழங்குவதிலும் ஜிஎல்சி-க்கு இணையானதாக உள்ளது. இந்த காரினுள் பயணத்திற்கான வழிக்காட்டுதலை வழங்குவதற்கு விர்டியூவல் காக்பிட் வழங்கப்படுகிறது.
லெக்ஸஸ் என்.எக்ஸ் (Lexus NX): அன்றாட அலுவலக பயன்பாட்டிற்கு மிகவும் ஸ்டைலான, அதேநேரம் விலை குறைவான சொகுசு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு லெக்ஸஸ் என்.எக்ஸ் சரியானதாக இருக்கும். இந்த காரில் பவர்ஃபுல்லான 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. அதாவது, இதுவும் ஹைப்ரீட் கார் ஆகும்.
பி.எம்.டபிள்யூ எக்ஸ்5 (BMW X5): தரையில் இருந்து 214மிமீ உயரத்தில் அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் உடன் கிடைக்கும் பிஎம்டபிள்யூ எஸ்யூவி காராக எக்ஸ்5 விளங்குகிறது. மேலும், தானாக மாறிக் கொள்ளக்கூடிய ஏர் சஸ்பென்ஷனையும் கொண்டிருப்பதால், இந்த காரை எந்தவொரு பாதைக்கும் தாராளமாக கொண்டு செல்லலாம்.
டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y): பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நுழைந்த டெஸ்லா அறிமுகம் செய்த முதல் கார், மாடல் ஒய் ஆகும். சமீபத்தில் மாடல் ஒய் எல் என்கிற புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், அதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதலால், எப்படியாவது குறைந்த விலையில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கிவிட வேண்டும் என விரும்புபவர்களுக்கு மாடல் ஒய் ஏற்றதாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நிச்சயமாக நம்மில் பலருக்கு கனவாக இருக்கும். அதனை குறைந்த விலையில் நிஜமாக்கிக் கொள்வதற்கு இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்களுள் ஒன்றை வாங்கலாம். லக்சரியாக இருக்கும் அதேநேரத்தில் இந்த கார்கள் அனைத்தும் செயல்படுதிறன் மிக்கவை ஆகும்.


Click it and Unblock the Notifications