இதுக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு மாருதி வேன் கிடைக்காது! ஸ்டாக் இருக்கானு ஷோரூம்களில் தேடி வாங்கிடுங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுள் ஆம்னி (Omni) ஒன்றாகும். அன்றாட நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப காம்பாக்ட்டான உடலமைப்பில், அதிக மைலேஜ் வழங்கும் வேன் மாடலாக ஆம்னி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாருதி சுஸுகி ஆம்னியின் விற்பனை எந்தவொரு அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளது.

அதிக பயணிகளை அல்லது அதிகளவிலான சுமைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனமான ஆம்னியை போன்று மாருதி சுஸுகி நிறுவனத்திலேயே ஈக்கோ (Eeco) என்கிற வேன் விற்பனை செய்யப்படுகிறது. இல்லை... அதற்கு பதிலாக அதிக பேர் பயணிக்கக்கூடிய கார் மாடலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கும் ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

affordable replacements for discontinued maruti suzuki omni

மாருதி சுஸுகி ஈக்கோ: ஆம்னிக்கு நேரடியாகவே மாற்று வேன் வாகனமாக ஈக்கோ விளங்குகிறது. கார்களுக்கு இணையாக, இந்தியாவில் தற்போதைக்கு அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களுள் ஒன்றாக ஈக்கோ உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.20 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. ஈக்கோவில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

சிஎன்ஜி ஆப்ஷனிலும் இந்த பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. பெட்ரோல் வெர்சனில் லிட்டருக்கு ரூ.19.7 மைலேஜையும், சிஎன்ஜி வெர்சனில் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 26.78கிமீ மைலேஜையும் ஈக்கோ வழங்குகிறது. 5-சீட்டர் மற்றும் 6-சீட்டர் ஆப்ஷன்களில் ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான கார்கோ பகுதி, ஹீட்டர் உடன் ஏசி, 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்டவை இதன் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.

affordable replacements for discontinued maruti suzuki omni

மாருதி சுஸுகி எர்டிகா (Ertiga): ஆம்னியை வாங்க முடியாமல் மாருதி சுஸுகி பிராண்டிலேயே மாற்று வாகனத்தை எதிர்பார்ப்பவர்கள் எர்டிகாவை வாங்க முயற்சிக்கலாம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் எம்பிவி (MPV) ரக காராக விளங்கும் எர்டிகாவில் அளவில் பெரியதான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இந்தியாவில் விலை குறைவான எம்பிவி ரக காராக விளங்கும் டிரைபர், விலைக்கு இணையாக காம்பாக்ட்டான எம்பிவி ரக காராக விளங்குகிறது. டிரைபரை மிக சமீபத்தில்தான் புதிய தோற்றத்திற்கு ரெனால்ட் அப்கிரேட் செய்திருந்தது. புதிய டிரைபரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.80 லட்சத்தில் இருந்து உள்ளன.

நிசான் கிராவைட் (Nissan Gravite): டிரைபரை போன்று குறைந்த விலையில் வாங்கக்கூடிய எம்பிவி ரக கார் இதுவாகும். இன்னும் சொல்லப்போனால், டிரைபரை உருவாக்க பயன்படுத்தப்படும் அதே சி.எம்.எஃப்-ஏ பிளாட்ஃபார்ம் (CMF-A Platform) தான் இந்த நிசான் எம்பிவி காரை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், டிரைபரை காட்டிலும் இன்னும் குறைவாக ரூ.5.65 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.

கியா கேரன்ஸ் (Kia Carens): இந்த லிஸ்ட்டில் நாம் பார்த்த கார்களை காட்டிலும் பிரீமியம் தரத்திலான எம்பிவி காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த கியா எம்பிவி கார் ஏற்றதாக இருக்கும். ரூ.10.99 லட்சத்தில் இருந்து விலையை கொண்டிருக்கும் கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய அளவிற்கு விற்பனை இல்லாத காரணத்தினால்தான் ஆம்னியின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்றாலும், இந்தியாவின் வேன் மார்க்கெட்டில் தனித்துவமான மற்றும் பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடியதாக ஆம்னி விளங்கியது. இத்தகைய வாகனத்திற்கு மாற்றாக ஒரு வாகனத்தை வாங்க விரும்புபவர்கள் இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள 5 வாகனங்களுள் ஒன்றை வாங்கலாம்.

Article Published On: Saturday, May 2, 2026, 21:07 [IST]
English summary
Affordable replacements for recently discontinued maruti suzuki omni check all details here
மேலும்... #omni #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+