அடிமாட்டு விலையில் டர்போ என்ஜின் உடன் வாங்க ஏற்ற எஸ்யூவி கார்கள்! இந்த 6 கார்களுக்கு அதிக செலவு பண்ண தேவையில்ல
டர்போ என்ஜின் (Turbo Engine) உடன் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு ஆசையாக இருக்கும். ஆனால், டர்போ என்ஜின் ஆனது பெரும்பாலும் விலைமிக்க கார்களிலேயே வழங்கப்படுகின்றன. ஏனெனில், டர்போ என்ஜின்களை உருவாக்குவது சற்று அதிக செலவுமிக்கதாக உள்ளது.
அதேபோல், டர்போ என்ஜின்களை பராமரிப்பதும், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் (Naturally Aspirated) என்ஜின்களை காட்டிலும் செலவுமிக்கதாக உள்ளது. இருப்பினும், சரியாக ஆராய்ந்தால் விலை குறைவான எஸ்யூவி (SUV) கார்களில் கூட டர்போ பெட்ரோல் என்ஜினை பெறலாம். அவ்வாறு, டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் குறைந்த விலையில் கிடைக்கும் எஸ்யூவி கார்களை பற்றி இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா பன்ச் (Tata Punch): மேலே கண்ட டாடா நெக்ஸான் காரை காட்டிலும் அளவில் சிறியதான எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு பன்ச் ஏற்றதாக இருக்கும். அதிகப்பட்சமாக 118 பிஎச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.7.59 லட்சத்தில் இருந்து ரூ.9.43 லட்சம் வரையிலான விலைகளில் பன்ச் விற்பனை செய்யப்படுகிறது.
கியா சிரோஸ் (Kia Syros): கியாவின் புதிய கொரியன்-ஸ்டைல் எஸ்யூவி காராக குறுகிய காலத்தில் கவனத்தை பெற்ற சிரோஸ் ஆனது டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் இந்த காரில் வழங்கப்படுவது இல்லை. இந்த காரின் எச்டிகே மேனுவல் மற்றும் எச்டிகே (ஆப்ஷ்னல்) மேனுவல் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10 லட்சத்திற்குள் உள்ளன.

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்தியாவில் தற்சமயம் குறைந்த விலையில் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார், நெக்ஸான் ஆகும். இந்த காரில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மாருதி சுஸுகியின் லேட்டஸ்ட் கார்களுள் ஒன்று என்பது மட்டுமின்றி, இந்தியாவில் குறைந்த விலையில் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் எஸ்யூவி காராகவும் ஃபிரான்க்ஸ் விளங்குகிறது. இந்த காரில் வழங்கப்படும் 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 99 பிஎஸ் மற்றும் 147 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
நிசான் மேக்னைட் (Nissan Magnite): ஜப்பானிய கார் நிறுவனமான நிசானில் இருந்து இந்தியாவில் ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகும் காரான மேக்னைட்டில் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது என்-கனெக்ட்டா மேனுவல், டெக்னா மேனுவல், டெக்னா+, அசெண்டா சிவிடி, என்-கனெக்ட்டா சிவிடி உள்ளிட்ட வேரியண்ட்களில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கிறது.
ஸ்கோடா கைலாக் (SKODA Kylaq): ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காராக விளங்கும் கைலாக்கில் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 114 பிஎச்பி மற்றும் 178 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகப்படியான இயக்க ஆற்றலை பெறுவதற்கு காரை டர்போ என்ஜின் உடன் வாங்க வேண்டும். இன்றைய காலத்தில் கார்களில் டர்போ என்ஜின் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஆதலால், மற்றவர்களுக்கு இணையாக அப்டேட்டாக இருக்க, மேலே கூறப்பட்ட எஸ்யூவி கார்களுள் ஒன்றை டர்போ என்ஜின் உடன் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications