5.3 மீட்டர் நீளத்தில் ஆடியின் மிகப்பெரிய புதிய க்யூ9 எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ஆடி நிறுவனத்தின் க்யூ வரிசையில் பல எஸ்யூவி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக க்யூ9 என்ற பெயரில் பிரம்மாண்டமான எஸ்யூவி மாடல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் க்யூ7 எஸ்யூவியைவிட உயரிய ரகத்தில் இந்த புதிய மாடல் சந்தைக்கு வர இருக்கிறது.

இந்த க்யூ9 என்ற உயரிய ரக புதிய எஸ்யூவி மாடலானது ஆடி நிறுவனத்தின் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக இருக்கும். ஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள ஆடி கார் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நவம்பரிலிருந்து டெலிவிரிப் பணிகள் துவங்கப்பட உள்ளன. வரும் ஆண்டு இந்தியாவிலும் இந்த புத்தம் புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

Audi Q9

மேலும், இந்தியாவை பொறுத்தவரை இங்கேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் போன்ற உயரிய ரக எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

ஆடி க்யூ9 எஸ்யூவியானது மிகப் பிரம்மாண்டமான தோற்றத்துடன் கவர்கிறது. இது ஆடி நிறுவனம் இதுவரை தயாரித்த கார்களிலேயே மிக நீளமானதாக இருக்கிறது. இந்த எM்யூவி 5,310 மிமீ நீளமும், 2,210 மிமீ அகலமும், 1,810 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 3,140 மிமீ நீளமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், க்யூ7 எஸ்யூவியை தொடர்ந்து ஆடி நிறுவனத்தின் இரண்டாவது 7 சீட்டர் சொகுசு ரக எஸ்யூவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Audi Q9

சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்லும் இந்த புதிய ஆடி க்யூ9 சொகுசு ரக எஸ்யூவியில் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 299எச்பி பவரையும், 630 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. இதுதவிர்த்து, 245 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல மற்றொரு வேரியண்ட்டும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

அமெரிக்க சந்தையில் 2.9 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 429 எச்பி பவரையும், 599 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, எஸ்க்யூ9 என்ற அதி செயல்திறன் மிக்க மாடலும் அமெரிக்க சந்தையில் வழங்கப்படும். இந்த மாடலில் 4 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 591 எச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வழங்கும். மேலும், வெறும் 4 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட வல்லதாக இருக்கும். இந்த இரு மாடல்களிலும் 24 எச்பி மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படும். இது செயல்திறனை அதிகரிக்க உதவும்.

Audi Q9

புதிய ஆடி க்யூ9 எஸ்யூவியில் நெருக்கமான அல்லது குறுகிய பகுதியில் எளிதாக திருப்பும் வகையில் ஆல் வீல் ஸ்டீரியங் சிஸ்டம் இடம்பெறுகிறது. அதேபோன்று, முன்சக்கரங்களில் 400மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரங்களில் 350மிமீ கம்போசிட் டிஸ்க் கொண்ட பிரேக்குகளும் உள்ளன.

இந்த காரில் டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், அருகிலுள்ள பொருட்களை உணர்ந்து தானாக திறந்து மூடும் ஆட்டோமேட்டிக் கதவுகள், 20 முதல் 23 அங்குல விட்டமுடைய அலாய் வீல்கள் என உயர் ரக ஆக்சஸெரீகளுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெறுகிறது. மேலும், 6 இருக்கைள் கொண்ட கேப்டன் சீட் அமைப்புடைய மாடலும் விற்பனைக்கு கிடைக்கும். வென்டிலேட்டட் மற்றும் மசாஜ் இருக்கைகளும் உள்ளன.

Audi Q9 Interior

இந்த புதிய காரில் 12.3 அங்குல டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 14.5 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்ட்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 அங்குல திரையுடன் கிடைய பயணிருக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் உள்ளன. பனரோமிக் சன்ரூஃப், 22 ஸ்பீக்கர்களுடன் கூடிய பேங் அண்ட் ஒலுஃப்ஸென் 4டி ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் இடம்பெறுகிறது.

இந்த காரில் மற்றொரு முக்கிய அம்சமாக இதன் அடாப்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ட் பிளஸ் வசதியை குறிப்பிடலாம். இந்த சிஸ்டம் மூலமாக மணிக்கு 130 கிமீ வேகம் வரை ஓட்டுனர் மேற்பார்வையுடன் இந்த கார் தானாகவே செல்லும் வசதியை அளிக்கும். இந்த கார் பெரிய குடும்பத்தினர் ஒன்றாக செல்வதற்கு ஏதுவான சொகுசு ரக எஸ்யூவியாக வருகிறது.

Article Published On: Thursday, July 30, 2026, 10:21 [IST]
English summary
All new audi q9 revealed globally specs features images india launch 2027
மேலும்... #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X