அடுத்த சில வருடங்களுக்கு இந்திய சாலைகளை ஆள போகும் கார்கள்! ரூ.8.50 லட்சத்தில் இருந்து ரூ.62 லட்சம் வரை!
இந்தியாவில் வழக்கம்போல் கடந்த 2026 ஏப்ரல் மாதத்திலும் பல கார் பிராண்ட்களில் இருந்து புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பலத்தரப்பட்ட மக்களை கவரும் விதமாக, பல்வேறு விதமான எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைகளில் ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஏழு கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2026 கியா சிரோஸ் (Kia Syros): கியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதன் சிரோஸ் காரை அப்கிரேட் அறிமுகம் செய்தது. இதன்படி, சிரோஸில் சில புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், தோற்றம் ரீதியாகவும் சிரோஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. காரின் முன்பக்கத்தில் பம்பரின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது; நியோன் பிரேக் காலிபர்கள் உடன் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறங்களில் வழங்கப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் (Mercedes-Benz CLA Electric): குறைந்த விலையில் புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நாம் கூறிக்கொண்டே இருந்ததை போல், புதியதாக சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வேரியண்ட்களில் ரூ.55 லட்சம் முதல் ரூ.64 லட்சம் வரையில் இந்த விலை குறைவான பென்ஸ் காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun): இந்தியாவில் கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக விற்பனையில் இருக்கும் தனது விலை குறைவான எஸ்யூவி காரான டைகுனை கடந்த மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மெருக்கேற்றி அறிமுகம் செய்துள்ளது. புதிய டைகுனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.19.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டெஸ்லா மாடல் ஒய் எல் (Tesla Model Y L): இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் டெஸ்லா கார், மாடல் ஒய் ஆகும். இதன் லாங்-வீல்பேஸ் வெர்சன் மாடல் ஒய் எல் என்கிற பெயரில் கடந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரின் கூடுதல் நீளத்திற்கு ஏற்ப மாடல் ஒய் எல் எலெக்ட்ரிக் காரின் விலையும் ஸ்டாண்டர்ட் மாடல் ஒய் காரை விட ரூ.2.10 லட்சம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி7 (VinFast VF MPV7): வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் விஎஃப் எம்பிவி7 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் காரின் விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ.24.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 ஹூண்டாய் ஐயோனிக் 5 (2026 Hyundai Ioniq 5): வெளிநாடுகளில் சில வருடங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரையில், முந்தைய ஜென்ரேஷன் ஐயோனிக் 5 சில வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்தது. இதனால், புதிய ஐயோனிக் 5 எப்போது இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.
மினி கூப்பர் எஸ் கன்வெர்டிபிள் ஜே.சி.டபிள்யூ (MINI Cooper S Convertible JCW): இந்தியாவில் மினி கூப்பர் எஸ் கன்வெர்டிபிள் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் புதிய ஜேசிடபிள்யூ பேக் வேரியண்ட் கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் கூப்பர் எஸ் கன்வெர்டிபிள் காரை காட்டிலும் ரூ.3 லட்சம் அதிகமாக ரூ.61.50 லட்சத்தில் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏப்ரலில் இருந்து புதிய 2026-27ஆம் நிதியாண்டு துவங்கியுள்ளதால், நிதியாண்டு துவக்கத்தில் புதிய கார்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படும் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். இருப்பினும், 7 கார்கள் அறிமுகம் என்பது கொஞ்சம் அதிகமே. இதில் இருந்து இந்திய கார்கள் சந்தை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை அறியலாம். இதில் நீங்கள் வாங்க விரும்பும் கார் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications