டேங்க் ஃபுல் செய்தால் 400கிமீ பயணம் நிச்சயம்... எத்தனை பேரது தொழிலை புரட்டி போட போகுதோ!!

அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் வாகனம். இந்துஜா (Induja) குழுமத்தின் ஓர் அங்கமாக வகிக்கும் அசோக் லேலண்ட் எடை குறைவான இரு புதிய கமர்ஷியல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 'தோஸ்த்' (DOST), 'தோஸ்த்+ எக்ஸ்.எல்' (DOST+ XL) என்கிற பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இந்த புதிய அசோக் லேலண்ட் வாகனங்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கமர்ஷியல் வாகனங்களை வழங்கும் அசோக் லேலண்டின் முயற்சியில் புதிய தோஸ்த் மற்றும் தோஸ்த்+ எக்ஸ்.எல் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், தோஸ்த் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.8.20 லட்சத்தில் இருந்தும், தோஸ்த்+ எக்ஸ்.எல் விலைகள் ரூ.8.75 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ashok leyland launches dost and dost plus xl twin fuel variants

இந்த இரு வாகனங்களையும் ட்வின்-ஃப்யுல் (Twin-fuel) வாகனங்கள் என அசோக் லேலண்ட் அழைக்கிறது. அதாவது, இவற்றை பெட்ரோலில் மட்டுமின்றி சிஎன்ஜி (CNG) எனப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவிலும் இயக்கலாம். உண்மையில் இவை பிரதானமாக, சிஎன்ஜி வாகனங்கள் ஆகும். ஏனெனில், இந்த வாகனங்களில் சிஎன்ஜி டேங்க் 120 லிட்டர்கள் கொள்ளளவில் பெரியதாக வழங்கப்பட்டுள்ளது.

அதுவே, பெட்ரோல் டேங்க் ஆனது அவசர காலத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏற்ப வெறும் 5 லிட்டர்கள் கொள்ளளவில் அளவில் சிறியதாக வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர பயணங்களின் போது, சிஎன்ஜி கிடைக்காத சமயங்களில் பெட்ரோலில் வாகனத்தை இயக்கும் வசதி பெரும் உதவியாக இருக்கும். இதற்காக எப்போதும் சிஎன்ஜியை ஸ்டாக்கில் வைத்துக் கொள்ளலாம்.

ashok leyland launches dost and dost plus xl twin fuel variants

சிஎன்ஜி டேங்க் மற்றும் பெட்ரோல் டேங்க் என இரண்டையும் முழுவதுமாக நிரப்பிக் கொண்டால், அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு எரிபொருளின் தேவை இல்லாமல் புதிய தோஸ்த் வாகனத்தில் பயணிக்கலாம். அதுவே, தோஸ்த்+ எக்ஸ்.எல் வாகனத்தில் சிஎன்ஜி டேங்க் ஆனது சற்று பெரியதாக 148 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது; ஆனால் பெட்ரோல் டேங்க் அதே 5 லிட்டர்கள் தான்.

சிஎன்ஜி டேங்கின் கொள்ளளவு அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப தோஸ்த்+ எக்ஸ்.எல் வாகனத்தில் எரிபொருளின் தேவையின்றி அதிகப்பட்சமாக சுமார் 500கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இந்த புதிய தோஸ்த் கமர்ஷியல் வாகனங்களின் அறிமுக நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் எடை குறைவான கமர்ஷியல் வாகனங்கள் பிரிவின் தலைவர் அமன்தீப் சிங் மற்றும் எடை குறைவான கமர்ஷியல் வாகன வணிகத்தின் முதன்மை அதிகாரி விப்லவ் ஷா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு சிஎன்ஜி வாகனங்களை அவசர காலங்களில் பெட்ரோலிலும் இயக்கும் வசதி ஆனது கார்களில் வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கமர்ஷியல் வாகனங்களிலும் வழங்க ஆரம்பித்துள்ளனர். உண்மையில், கார்களை காட்டிலும் கமர்ஷியல் வாகனங்களில் தான் இத்தகைய வசதி அவசியமாகிறது. ஏனெனில், கமர்ஷியல் வாகனங்களில் தான் அடிக்கடி தொலைத்தூர பயணங்களை பல்வேறு விதமான பகுதிகளுக்கு மேற்கொள்வோம்.

இருப்பினும், நாடு முழுவதும் சிஎன்ஜியை பரவலாக கிடைக்க செய்வதன் மூலமாகவே இவ்வாறான சிஎன்ஜி வாகனங்களின் அறிமுகங்கள் அதிகரிக்கும். சிஎன்ஜி அதிகமாக தற்போதைக்கு நகர்புறங்களிலும், குறு நகரங்களிலும் தான் கிடைக்கின்றன என்பதால், அசோக் லேலண்டின் புதிய தோஸ்த் வாகனங்களின் பயன்பாடு அத்தகைய நகர்புற பகுதிகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2026, 18:19 [IST]
English summary
Ashok leyland launches dost and dost plus xl twin fuel variants check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+