பணக்காரர்களே பார்த்து பொறாமை படும் புதிய ஆடி கார்! விலையை மட்டும் பார்த்திராதீங்க!

ஆடி (Audi) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய எஸ்.க்யூ8 (SQ8) காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.1.78 கோடி என்கிற விலையில் லக்சரியான ஆடி காராக இது களமிறக்கப்பட்டுள்ளது. மேலும், விலைக்கு ஏற்ப செயல்படுதிறனிலும் இது சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த புதிய ஆடி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தின் க்யூ வரிசை எஸ்யூவி (SUV) கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் க்யூ8 (Q8) மற்றும் ஆர்.எஸ் க்யூ8 (RS Q8) கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இதில் புதியதாக எஸ்.க்யூ8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

audi sq8 india launch

ஆடி க்யூ8 மற்றும் ஆர்.எஸ் க்யூ8 காருக்கு மத்தியில் புதிய எஸ்க்யூ8 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, க்யூ8 காரை காட்டிலும் விலை மற்றும் செயல்திறன்மிக்கதாக, அதேநேரம் ஆர்.எஸ் க்யூ8 காரை விட விலை குறைவானதாக புதிய எஸ்.க்யூ8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.1.78 கோடியில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய ஆடி எஸ்க்யூ8 காரில் 4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 500 பிஎச்பி மற்றும் 770 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

audi sq8 india launch

இந்த புதிய பெர்ஃபார்மன்ஸ் மிக்க ஆடி காரில் வெறும் 4.1 வினாடிகளில் 0 முதல் மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிடலாம். ஏற்கனவே கூறியதுபோல், வழக்கமான க்யூ8 காரை விட புதிய எஸ்க்யூ8 மேம்பட்டதாக உள்ளது. இதன்படி, காரின் தோற்றத்தில் சில அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய எஸ்க்யூ8 காரை சுற்றிலும் பல இடங்களில் சில்வர் நிற ஃபினிஷிங் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், காரின் முன்பக்கத்தில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்களும், பின்பக்கத்தில் குவாட் எக்ஸாஸ்ட் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், காரின் அலாய் சக்கரங்களிலும் புதுமையான டிசைன் பின்பற்றப்பட்டுள்ளது.

உட்புறத்தில் 2026 ஆடி எஸ்யூ8 காரின் டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் இரட்டை திரைகள், பனோராமிக் சன்ரூஃப், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு எஸ்-லைன் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. எஸ்-லைன் பேட்ஜை ஸ்டீயரிங் சக்கரத்திலும் பார்க்க முடிகிறது. காரின் கேபின் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி வசதி உடன் உள்ளது.

காருக்குள் முன் இருக்கைகள் இரண்டும் ஹீட்டிங், கூலிங் வசதிகள் உடன் உள்ளன. அதாவது, பயணிகளின் தேவைக்கேற்ப இவை வெப்பமான மற்றும் குளிர்ச்சியான காற்றை வழங்கும். மேலும், முன் இருக்கைகள் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்மெண்ட் மற்றும் மசாஜ் செயல்பாடுகளுடனும் உள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக ஏர்பேக்குகள் உடன் ஏகப்பட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனம் அதன் செயல்திறன்மிக்க கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஸ்க்யூ8 செல்வந்தர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால், இந்த நேரத்திற்கு உள்ளாகவே இந்தியாவில் பணக்காரர்கள் நிறைய பேர் இந்த காரை புக் செய்து இருப்பர்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 19, 2026, 19:06 [IST]
English summary
Audi india launches new sq8 luxury car price features engine all details here
மேலும்... #audi #new launches #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+