ஆகஸ்ட் கார் விற்பனை: அசத்திய நிறுவனங்கள் எவை? சரிவை சந்தித்த நிறுவனங்கள் எவை? முழு லிஸ்ட் இதோ!!

இந்திய கார் சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதாந்திர கார் விற்பனை புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 4,02,398 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,46,468 கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனை 16.14 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இதுவரையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 4 லட்சத்தை கடந்தது இதுவே முதல் முறை என்ற சாதனையும் படைத்துள்ளது.

இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளத் தரவுகளின்படி, கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்த நிறுவனம் 1,65,200 கார்களை சில்லறை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 22.83 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள மாருதி, சந்தையின் ஒட்டுமொத்த விற்பனையில் 41.05 சதவீத பங்குடன் ஆதிக்கம் செலுத்துகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் டாடா கார்ஸ் நிறுவனத்தை விட மாருதியின் மாதாந்திர விற்பனை இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

Top 10 Car Brands August Sales

ஆனால் வளர்ச்சி விகிதத்தை பார்க்கும்போது டாடா கார்ஸ் நிறுவனம்தான் இந்த பட்டியலில் கவனம் ஈர்க்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா கார்ஸ் நிறுவனம் 57,841 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 41,170 கார்களாக இருந்த விற்பனை தற்போது 40.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் முன்னணி 10 நிறுவனங்களில் அதிகமான வருடாந்திர வளர்ச்சியை டாடா கார்ஸ் நிறுவனம்தான் பதிவு செய்துள்ளது. சந்தைப் பங்கும் 11.88 சதவீதத்தில் இருந்து 14.37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அடுத்து மஹிந்திரா நிறுவனம் 50,245 கார்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் வருடாந்திர வளர்ச்சி 6.41 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 46,987 கார்களை விற்பனை செய்து 4.84 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் டாடா கார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களை விட குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

Rank Car Brand August 2026 Sales August 2025 Sales YoY Growth Market Share
1 Maruti Suzuki 1,65,200 1,34,494 +22.83% 41.05%
2 Tata Motors 57,841 41,170 +40.49% 14.37%
3 Mahindra 50,245 47,220 +6.41% 12.49%
4 Hyundai 46,987 44,818 +4.84% 11.68%
5 Toyota 24,856 27,600 -9.94% 6.18%
6 Kia 23,371 19,873 +17.60% 5.81%
7 Skoda Volkswagen Group 7,469 9,069 -17.64% 1.86%
8 MG 5,784 6,650 -13.01% 1.44%
9 Honda 4,968 4,421 +12.37% 1.23%
10 Renault 3,275 2,618 +25.10% 0.81%

டொயோட்டா நிறுவனம் 24,856 கார்களை விற்பனை செய்துள்ள நிலையில் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.94 சதவீதம் குறைந்துவிட்டது. மேலும், இந்த நிறுவனம் ஒட்டுமொத்த சந்தையில் 6.18 சதவீத பங்கை பெற்றுள்ளது. கியா மோட்டார் இந்தியா நிறுவனம் 23,371 கார்களுடன் 17.60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் குழுமம் 7,469 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட்டைவிட விற்பனை 17.64 சதவீதம் குறைந்துவிட்டது. ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் 5,784 கார்களை ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. அடுத்து ஹோண்டா கார் நிறுவனம் 4,968 கார்களை விற்பனை செய்துள்ளது. ரெனோ கார் நிறுவனம் 3,275 கார்களுடன் 25.10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்த விற்பனை தரவுகளில் மற்றொரு முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம், ஒட்டுமொத்தமாக ஆகஸ்ட் மாத விற்பனையில் சிஎன்ஜி, ஹைப்ரிட், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை பங்கு 41.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல்/எத்தனால் கார்களின் பங்கு 40.85 சதவீதமாக இருந்ததால், மாற்று எரிபொருள் வாகனங்கள் முதல் முறையாக பெட்ரோல் கார்களை விஞ்சி பதிவாகி உள்ளது. இருப்பினும் தனிப்பட்ட எரிபொருள் வகையாக பார்க்கும்போது பெட்ரோல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புற பயணிகள் வாகன விற்பனை 24.99 சதவீதம் வளர்ந்துள்ளது. நகர்ப்புற சந்தையில் வளர்ச்சி 10.93 சதவீதமாக இருந்தது. இதனால் இந்திய கார் சந்தையின் அடுத்த கட்ட வளர்ச்சியில் கிராமப்புற சந்தை முக்கிய கருவியாக மாறி இருக்கிறது.

Source: FADA

Article Published On: Tuesday, September 8, 2026, 13:59 [IST]
English summary
August 2026 car sales retail sales top companies growth decline
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out