இந்திய கார் தான் வேணும்னு அடம்பிடிக்கும் வெளிநாட்டு மக்கள்! ஏற்றுமதி எகிறிடுச்சு!
இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை 13 சதவீதம் அளவுக்கு ஆட்டோமொபைல் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் எல்லாம் இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி என்ற குழுமத்தில் மூலம் வெளியான தகவல்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இப்படியாக ஏற்றுமதி செய்து வருவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஏற்றுமதி விபரங்களை இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 6, 70,930 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 5,78,991 வாகனங்கள் ஏற்றுமதி ஆகிறது தற்போது ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த ஏற்றுமதி அதிகரிப்பதன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கியமான மார்க்கெட் ஆகிய வருகிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் மெக்சிகோ, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த வாகன ஏற்றுமதியில் எலெக்ட்ரிக் வாகனங்கள், கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களும் சிறிய மற்றும் எஸ்யூவி பிரிமியம் வாகனங்களும் அடங்கும். அனைத்து ரக வாகனங்களும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதியில் மாருதி நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தம் 3,00,837 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இந்த வாகனங்கள் எல்லாம் சுமார் 100 நாடுகளுக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிறுவனம் மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 46 சதவீத பங்கை வைத்துள்ளது. கடன் 5 ஆண்டுகளாக மாருதி நிறுவனம் ஏற்றுமதியில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. 365 சதவீதம் அளவுக்கு அந்நிறுவனம் வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த தகவலின் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.
மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரின் ஏற்றுமதியே இந்நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்த கார்கள் 29 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்த இடத்தில் ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மற்றும் 1,48,428 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான 1,00,256 என்ற வாகன எண்ணிக்கை ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனம் கிரெக்டா, வென்யூ, எக்ஸ்டர் உள்ளிட்ட வாகனங்களை 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் அடங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து ஏற்றுமதி அதிகரித்து வருவது இந்தியா எவ்வளவு வளர்ந்த நாடாக மாறி வருகிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









