வெறும் 3 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்... உலகையே மிரள விட போகும் இந்திய நிறுவனம்... ஒரு சில வாரங்களில் லான்ச்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் வாகனங்களில் ஒன்று பஜாஜ் க்யூட் (Bajaj Qute). இது குவாட்ரிசைக்கிள் (Quadricycle) ரகத்தை சேர்ந்த வாகனம் ஆகும். அதாவது அளவில் சிறிய கார். இன்னும் புரியும்படி சொல்வதென்றால், வழக்கமான கார்களை விட அளவில் சிறிய, அதே நேரத்தில் இலகுவான வாகனங்களைதான், குவாட்ரிசைக்கிள் என்கின்றனர்.
தற்போதைய நிலையில் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களில் பஜாஜ் க்யூட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 216.6 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எல்பிஜி மூலமாக இயங்கும்போது இதன் அதிகபட்ச பவர் அவுட்புட் 9.15 kW ஆக இருக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் அதிகபட்ச பவர் அவுட்புட் 8.08 kW ஆக இருக்கும்.

இது 4 சீட்டர் கார் ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி தற்போதைய நிலையில் எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களில் மட்டுமே பஜாஜ் க்யூட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கூடிய விரைவில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனத்தின் ஆரம்ப விலை வெறும் 3 அல்லது 3.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனத்தில் 10 முதல் 15 kWh திறனுடைய லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 100 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.
ஆனால் பேட்டரி ஆப்ஷன் மற்றும் ரேஞ்ச் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனம் மிகவும் விலை குறைந்ததாக இருந்தாலும் கூட, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஏசி போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படவுள்ளன.
theuniqueshadow07 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனத்தின் வாக்அரவுண்ட் வீடியோ வெளியிட்டுள்ளது. பஜாஜ் க்யூட் இவி எலெக்ட்ரிக் வாகனத்தில் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஏசி போன்ற வசதிகள் (Features) வழங்கப்படவிருப்பது, இந்த வைரல் வீடியோ (Viral Video) மூலமாகவே நமக்கு தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஜாஜ் க்யூட் இவி போன்ற சிறிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையின் தேவை ஆகும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இது போன்ற சிறிய எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை குறைக்க உதவி செய்யும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications