எத்தனை பேரை உள்ளே ஏத்துனாலும் இடம் இருக்கும்... பலரது தொழிலை மாற்ற போகும் நீளமான எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், இந்தியாவின் எலெக்ட்ரிக் (Electric) மூன்று சக்கர வாகனச் சந்தையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், தனது புதிய 'வேகோ பி9018' (WEGO P9018) எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 296 கி.மீ தூரம் செல்லக்கூடிய சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் உடன் வந்துள்ளது.

இது தவிர, 17.7 kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி தொகுப்புடன் இந்தியாவில் கிடைக்கும் மிகப்பெரிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனமாக இது திகழ்கிறது. புனேவைச் சேர்ந்த பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய 'வேகோ பி9018' வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) நாடு முழுவதும் ரூ.4,41,247 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

bajaj wego p9018 electric 3-wheeler launch

நகர்ப்புறம், சிறு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறச் சந்தைகளில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், பஜாஜ் ஆட்டோவின் எலெக்ட்ரிக் போக்குவரத்துப் பிரிவில் ஒரு முக்கிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. வேகோ பி9018 மாடல், இந்தியாவின் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உள்ள மிகப்பெரிய பேட்டரி திறனைக் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS), ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் உகந்த வாகன வடிவமைப்பு ஆகிய அம்சங்கள் இதன் நீண்ட தூர பயண ரேஞ்சுக்குக் காரணமாக அமைந்துள்ளன. மேலும், 2-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 36% ஏறுமுகமான சாலைகளிலும் ஏறும் திறன், பல்வேறு நிலப்பரப்புச் சாலைகளிலும் திறம்பட செயல்பட உதவுகிறது.

இந்த வாகனத்திற்கு 5 ஆண்டு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. வேகோ என்கிற புதிய பிராண்ட், பஜாஜ் ஆட்டோவின் பயணிகள் வாகனப் பிரிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது லாஸ்ட்-மைல் (Last-mile) போக்குவரத்துச் சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் ஆழமான இருப்பை வெளிப்படுத்துகிறது. இயக்கத் திறன் மற்றும் ரேஞ்சை மேம்படுத்துவதே இந்த அம்சங்களின் முக்கிய நோக்கம் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் நகர்ப்புற வணிகப் பிரிவின் தலைவர் சமர்தீப் சுபந்த் இந்த புதிய அறிமுகம் குறித்து கூறுகையில், "வேகோ பி9018 இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனம். இது மிகப்பெரிய பேட்டரி மற்றும் முழு-சார்ஜில் 296 கி.மீ பயணம் என்ற மிகச்சிறந்த ரேஞ்சைக் கொண்டுள்ளது.

நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற அதிக சுமை சுமந்து செல்லும் திறன் கொண்ட மூன்று சக்கர வாகனங்கள் தேவைப்படும் இந்தியாவின் நகர்ப்புற, துணை நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சந்தைகளுக்கு வேகோ மிகவும் பொருத்தமானது. இந்த புதிய பிராண்ட், இந்தியாவின் லாஸ்ட்-மைல் பயணச் சந்தையின் ஒவ்வொரு பிரிவிற்கும், தேவைக்கும் சிறந்த மூன்று சக்கர வாகனங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோ, உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகன உற்பத்தியாளராகத் திகழ்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2.1 கோடிக்கும் அதிகமான மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்து, இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. சமீபத்தில், உலகளவில் 2,000 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை அடைந்த முதல் இருசக்கர வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையையும் பஜாஜ் ஆட்டோ பெற்றது. இத்தகைய நிறுவனத்தில் இருந்துதான் தற்போது இவ்வாறான ஒரு எலெக்ட்ரிக் 3-வீலர் ஆட்டோ ரிக்‌ஷா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 10, 2026, 10:47 [IST]
English summary
Bajaj wego p9018 electric 3 wheeler auto rickshaw check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+